தமிழகம்

தவெகவின் ‘பிரதமர் விஜய்’ வியூகம்: கூட்டணியில் இருந்து விலகத் தயாராகிறதா காங்கிரஸ்?

வே.கோபாலகிருஷ்ணன்

சென்னை: ராகுல் காந்​தியை பிரதமர் வேட்​பாள​ராக தவெக ஏற்​கா​விட்​டால், அக்​கட்சி உடனான கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி, தமிழகத்​தில் தனித்​துப் போட்​டி​யிட காங்​கிரஸ் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​று, காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளின் ஆதர​வுடன் ஆட்​சி​யமைத்​துள்ள தவெக, முதல்​வர் விஜய்யை பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தும் பணி​களை தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒருபகு​தி​யாகவே, வடமாநிலங்​களில் ‘ரீல்​ஸ்’ பரப்​பப்​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

சமீபத்​தில் சட்​டப்​பேர​வை​யில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “எதிர்​காலத்​தில் தமிழகத்​தில் இருந்து ஒரு பிரதமர் உரு​வாக்​கப்பட வேண்​டும்” என்று குறிப்​பிட்​டதைத் தொடர்ந்​து, விஜய்​தான் அடுத்த பிரதமர் என தவெக​வினர் பேசத் தொடங்​கினர்.

இது காங்​கிரஸ் கட்​சி​யினரை அதிர்ச்​சி​யடையச் செய்​துள்​ளது. இதையடுத்​து, தவெக உடனான கூட்​ட​ணியை முறித்​துக் கொள்​ள​வும் காங்​கிரஸ் தயா​ராகி​விட்​ட​தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: விஜய்​தான் பிரதமர் வேட்​பாளர் என தவெக​வினர் சொல்​வதை காங்​கிரஸ் ரசிக்​கவில்லை. இதன் வெளிப்​பா​டாகவே அக்​கட்​சி​யின் மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர், “தவெக​வினர் இன்​னும் ரசிகர் மன்ற மனநிலை​யிலேயே உள்​ளனர்” என்​றார்.

இதற்​கிடையே, தனி​யார் நிறு​வனம் வெளி​யிட்ட கருத்​துக் கணிப்​பில், ‘2029 மக்​கள​வைத் தேர்​தலில் பிரதமர் பதவிக்​கான பந்​த​யத்​தில் விஜய் 9 சதவீத ஆதர​வுடன் 3-வது இடத்​தில் இருக்​கிறார்’ என தெரிவிக்​கப்​பட்​டது. இது டெல்லி காங்​கிரஸ் தலை​மை​யிடம் பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, “நமது நிலைப்​பாட்​டைத் தெளி​வாகத் தெரி​வித்து விடுங்​கள்” என டெல்லி தலைமை அறி​வுறுத்​தி​யது.

அதன்​படியே, சமீபத்​தில் பேசிய தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன், “2029 தேர்​தலில் பிரதமர் வேட்​பாள​ராக ராகுல் காந்​தி​தான் நிறுத்​தப்​படு​வார்” என்​றார். தொடர்ந்து சுற்​றுலா துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார், “2029 தேர்​தலில் ராகுல் காந்​தி​தான் பிரதம​ராக வருவார். ஒரு​வேளை தவெக அதற்கு உடன்​ப​டா​விட்​டால் காங்​கிரஸ் கட்சி​யின் 2 அமைச்​சர்​களும் இப்பதவி​யில் நீடிக்க மாட்​டார்​கள்” என்றார். ஆனாலும், இதற்கு தவெக தரப்​பில் இருந்து எந்த பதி​லும் வரவில்​லை.

இந்த சூழலில், இவ்​வளவு காலம் திமுகவை கடுமை​யாக எதிர்த்து வந்த காங்​கிரஸ் மீண்​டும் திமுகவைப் புகழ்ந்து பேசத் தொடங்​கி​யுள்​ளது. நேற்று சட்​டப்​பேர​வை​யில் பேசிய காங்​கிரஸ் எம்​எல்ஏ தாரகை கத்​பர்ட், “நான் வெற்​றி​பெற வேண்​டும் என்று தனது மகனை எனது தொகு​திக்கு அனுப்பி வைத்​தார் ஸ்டா​லின். திமுக​வும், காங்​கிரஸும் ஒன்​றிணைந்து பாஜக​வுக்கு எதி​ராக பல போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது” என்றார்.

இதன்​மூலம், ராகுல் காந்​தியை பிரதமர் வேட்​பாள​ராக தவெக ஏற்​கா​விட்​டால், அக்​கட்சி உடனான கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வோம் என்​ப​தையே காங்​கிரஸ் சூசக​மாக தெரி​வித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. விரைவில் செயற்​குழுவை கூட்​டி, ‘ராகுலை பிரதம​ராக ஏற்​கும் கட்​சி​யுடன்​தான் கூட்​ட​ணி’ என தீர்​மானம் நிறைவேற்​ற​வும் காங்​கிரஸ் திட்​ட​மிட்​டுள்​ளது.

அதே​நேரம், மீண்​டும் காங்​கிரஸை ஏற்க திமுக தயா​ராக இல்​லை. அதனால், தவெகவிடம் இருந்து வில​கும் சூழல் ஏற்​பட்​டால், தமிழகத்​தில் தனித்து தேர்​தலை சந்​திக்​க காங்​கிரஸ் முடிவு செய்​துள்​ளது. இதற்​காக கட்​சியை அடிமட்​டத்​தில் இருந்து பலப்​படுத்​தும் வேலைகள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. விரை​வில் மத்​திய அரசுக்கு எதி​ரான போராட்​டங்​களை​யும் தீவிரப்​படுத்த காங்​கிரஸ் திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

முதல்வர் - மாணிக்கம் தாகூர் சந்திப்பு

தவெக கூட்​ட​ணி​யில் இருந்து விலக காங்​கிரஸ் தயாராகி வருவ​தாககூறப்படும் நிலையில், சென்னை தலை​மைச் செயலகத்​தில் முதல்​வர் விஜய்​யை, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், பிர​வீன் சக்​கர​வர்த்தி எம்​.பி. ஆகியோர் நேற்று திடீரென சந்​தித்​தனர். அப்​போது காங்​கிரஸ் தரப்​பில், “தமிழகத்​தில் தவெக ஆட்​சி​யமைக்க நாங்​கள்​தான் உறு​துணை​யாக இருந்​தோம். ஆட்​சி​யிலும் அங்​கம் வகிக்​கிறோம்.

தற்​போது ‘விஜய்​தான் பிரதமர் வேட்​பாளர்’ என்று தவெக​வினர் தொடர்ந்து பேசி வரு​வ​தால், அகில இந்​திய அளவில் இண்​டியா கூட்​ட​ணிக்​குள் பிரச்​சினை​கள் உரு​வாகின்​றன. எனவே, இந்த விவ​காரத்​துக்கு உடனே முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதற்​கு முதல்​வர்​ விஜய்​, “கட்​சி​யினரிடம்​ இதுகுறித்​து பேசுகிறேன்” என்​று தெரிவித்​த​தாகவும்​ கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT