திருவாரூர் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? - ஸ்டாலின் கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: “பாஜக எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜக எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?

          

அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை தெற்கு தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ராம.சீனி​வாசன் வேட்​புமனுத் தாக்​கலில் பங்​கேற்​ப​தற்​காக மகாராஷ்டிரா முதல்​வர் தேவேந்திர பட்​னா​விஸ் நேற்று மதுரை வந்​தார். அப்போது பேசிய அவர், “மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் வெற்றி பெறுவார். அவர் எம்.எல்.ஏ., ஆனதும் பிரதமர் மோடியிடம் அவரை அழைத்துச் செல்வோம். பிரதமரை அவர் சந்தித்ததும் மதுரைக்கு மெட்ரோ ரயில்திட்டம் வந்து விடும்” என்று பேசியிருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT