தமிழகம்

தன்னையே வாசிப்பதே வளர்ச்சியின் அடிப்படை: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) 2026-ஐ ஒட்டி, பெரம்பூரில் உள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தொடர் அறிமுகக் கருத்தரங்கில் `நம்மையே வாசிப்போம்' என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உரையாற்றினார்.

தமிழ் மொழியின் இசைத் தன்மையுடன் கூடிய அவரது உரையில், உயிரெழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வாசகர்களின் வகைகள் விளக்கப்பட்டன. கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், மார்லோ, ஷேக்ஸ் பியர் உள்ளிட்ட உலகச் சிந்தனையாளர்களின் வாசிப்பு மரபு களும் சுட்டிக்காட்டப்பட்டன.

புத்தகங்களோடு தொடர்பை ஒருபோதும் இழக்கக்கூடாது என்பதையும், வாழ்வில் உயர்வடையத் தேவையான 5 ‘படி’களையும், தன்னுணர்வே தலைமையின் அடித்தளம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வு செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி சார்பில் நடந்தது. சென்னை மாவட்ட நூலக அலுவலர் மு.கவிதா ஒருங்கிணைத்தார்.

SCROLL FOR NEXT