சென்னை: தாம்பரம் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் யூனிட் ஒப்புதல் குழு கூட்டம் மண்டல மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரூ.443.11 கோடி மதிப்பிலான 11 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 9 புதிய சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்களும், 2 ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களும்அடங்கும்.
இந்த புதிய முதலீடுகள் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். இந்த 11 புதிய திட்டங்கள் மூலம் பல்வேறு தொழில் துறைகளில் மொத்தம் 2,427 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த முதலீடுகள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தளவாட சேவைகள் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முதலீட்டு திட்டங்கள் சென்னையின் தொழில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் அளிக்கும்.