சென்னை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற அரசு பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்பிய சுற்றறிக்கை: திருவண்ணாமலை அருணா சலேசுவரர் கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்களில் 109 பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்து நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கோயிலில் அறங்காவலர் குழுபதவிக்காலம் முடிவுற்றதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும், கோயிலில் 109 காலிபணியிடங்களை நிரப்ப வழங்கப்பட்ட நேர்காணல் அனுமதி ரத்து செய்யப்படுகிறது.