சென்னை: பொது நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 5-வது ஆண்டு ‘பன்னாட்டு புத்தகக்காட்சி’ சென்னை வர்த்தக மையத்தில் 2027 ஜனவரி 16, 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினையை (லோகோ) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று வெளியிட்டார்.
அவர் பேசும்போது, “பன்னாட்டு புத்தகக் காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சி இது.” என்றார். இலக்கிய முகவர்களுக்கான பயிற்சி வகுப்பையும் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி, பொது நூலகத் துறை இயக்குநர் ஷஜீவனா, அண்ணா நூற்றாண்டு நூலக தகவல் அலுவலர் ஸ்ரீதேவி பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். புத்தகக் காட்சியில் தாய்லாந்து பதிப்பாளர்கள் சங்கமான ‘புபாட்’ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.