சென்னை - கோவை - தூத்துக்குடி விரைவுச் சாலை: ஆய்வறிக்கை தயாரிப்புக்கு ஆலோசகரை நியமிக்க டெண்டர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை, கோவை,தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், புதிய தொழில்துறை விரைவுச் சாலை அமைக்க தொழில்நுட்ப - பொருளாதாரச் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்புக்கு ஆலோசகரை நியமிக்க டெண்டர் கோரப்பட் டுள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி திறனை வலுப்படுத்த முக்கிய தொழிற்பகுதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மையங்களை இணைக்கும் விதமாக விரைவுச் சாலைகளை ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

வளர்ந்துவரும் தொழில் மையங்கள்: தமிழகத்தின் தொழில் முதலீட்டு பகுதிகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில் மையங்களான சென்னை, தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் திறன்மிக்க வகையில் இணைத்து விரைவுச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இதற்கான தொழில்நுட்ப - பொருளாதாரச் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க மாநில நெடுஞ்சாலை ஆணை யம் டெண்டர் கோரியுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த வழித்தடம் முக்கியத் தொழில் தொகுப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மையங்களை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியையும் ஏற்றுமதிப் போட்டித்தன்மையையும் வலுப்படுத்தும்.

முக்கிய முதலீட்டுத் தளங்களாகவும், வளர்ந்து வரும் தொழில் மையங்களாகவும் திகழும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதன் மூலம், இந்தத் தொழில் வழித்தடவிரைவுச் சாலைத் திட்டம் கட்டம் கட்டமாக மேம்படுத்தப்படும். டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், நில உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் வகையில், தற்போதைய சட்ட வரம்புக்குள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலம் கையகப்படுத்தும் முறைகளை ஆராயும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? - அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை

X