தமிழகம்

இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

செய்திப்பிரிவு

வேளாண் துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக இடைக்​கால பட்​ஜெட்​டில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வேளாண் அமைச்​சர் எம்​.ஆர்​. கே.பன்​னீர்​செல்​வம் நேற்று தாக்​கல் செய்த இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: சென்​னை​யில் உலகத்​தரத்​தில் கலைஞர் நூற்​றாண்டு பூங்​கா, திரு​வண்​ணா​மலை​யில் கலைஞர் நூற்​றாண்டு பூங்​கா, நீல​கிரி கோத்​தகிரி​யில் ஜான் சல்​லிவன் பூங்கா ஆகிய 3 பூங்​காக்​கள் ரூ.71 கோடி செல​வில் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

          

கடந்த 5 ஆண்​டு​களில் 83.64 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ரூ.69,457 கோடி பயிர்​கட​னும், 16 லட்​சத்து 9 ஆயிரம் பேருக்கு ரூ. 8,938 கோி கால்​நடை, மீன்​வளர்ப்பு உள்​ளிட்ட வேளாண் சார்ந்த கடனும் வழங்​கப்​பட்​டுள்​ளன. 4 லட்​சம் மெட்​ரிக் டன் கொள்​ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்​புத்​தளங்​கள் ரூ.331 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்​டுள்​ளன. மேலும், 3.30 லட்​சம் மெட்​ரிக் டன் கொள்​ளளவு கொண்ட 130 சேமிப்​புத்​தளங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

பால் உற்​பத்​தியை பெருக்​கும் வகை​யில் 23 ஆயிரம் ஏக்​கர் விவ​சாய நிலங்​களில் பசுந்​தீவன சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளது. விவ​சா​யிகளுக்கு 50 சதவீத மானி​யத்​தில் 10 ஆயிரம் புல்​லறுக்​கும் கருவி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. வரு​மானத்தை ஈட்​டும் வகை​யில் ஆதர​வற்ற பெண்​கள், விதவை​கள் 38,800 பேருக்கு 100 சதவீத மானி​யத்​தில் ரூ.75.63 கோடி செல​வில் வெள்​ளாடு​கள், செம்​மறி​யாடு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

ரூ.30 கோடி மதிப்​பீட்​டில் செங்​கல்​பட்டு மாவட்​டம் காட்​டுப்​பாக்​கத்​தில் நவீன ஒருங்​கிணைந்த இறைச்சி உற்​பத்தி மற்​றும் இறைச்சி பதப்​படுத்​தும் வளாகம் அமைக்க அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. இதனால் கால்​நடைகளை பெருக்கி கால்​நடை பொருட்​களின் ஏற்​றுமதி அதி​கரிக்க முடி​யும். இதன் மூலம் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

ரூ.7.76 கோடி நுண்​கடன்: 2025-2026-ம் நிதி ஆண்​டில் ரூ.34 கோடி மதிப்​பில் 1,739 மீன​வர்​கள் மற்​றும் மீன்​வளர்ப்​போருக்கு கடன் அட்​டைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அலை​கள் திட்​டத்​தின் கீழ் தமி​ழ​கம் முழு​வதும் 15,525 பேருக்கு ரூ.7.76 கோடி நுண்​கடன் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஊரகப் பகு​தி​களில் உள்ள சிறு-குறு ஆதி திரா​விட, பழங்​குடி​யின விவ​சா​யிகள், பெண்​களைக் தலை​வி​யாகக் கொண்ட ஏழைக்​குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரங்​களை மேம்​படுத்​தும் பொருட்டு கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.15,236 கோடி செல​வில் 5,649 விவ​சாய கிணறுகள், 33,853 பண்​ணைக்​குட்​டைகள்​ 2.66 லட்​சம் மண்​வரப்​பு​கள் உள்​ளிட்ட பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. ரூ.3.24 கோடி செல​வில் மரக்​கன்​றுகள் உற்​பத்​தி​செய்​யப்​பட்டு விநி​யோகிக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் வேளாண் காடு​கள் கீழ் 2.24 லட்​சம் ஏக்​கர் பரப்​பளவு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல்.. அடிப்​படை ஆண்​டான 2011-2012-ம் ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது, 2024-2025-ல் வேளாண்​மை​யில் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி மதிப்பு 9.97 சதவீதம் உயர்ந்​துள்​ளது. 2021-22-ம் ஆண்டு பட்​ஜெட்​டில் வேளாண் துறைக்கு ரூ.34,220 கோடி​யாக இருந்த நிதி ஒதுக்​கீடு 2025-26-ம் நிதி ஆண்​டில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் வேளாண் துறைக்கு அரசு அளித்து வரும் முக்​கி​யத்​து​வத்தை அறிய​லாம். 2026-2027-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட்​டில் வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உழவர் நலனுக்​கான திட்​டங்​கள் தொடர்ந்து செயல்​படுத்​தப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT