தமிழகம்

கோடை முடிந்தும் குறையாத வெயில் தாக்கம் - அவசரகதியில் பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் அவதி!

ச.கார்த்திகேயன், சி.பிரதாப்

சென்னை: கோடை முடிந்​தும் வெயில் தாக்​கம் குறை​யாத நிலை​யில், பள்​ளி​கள் திறக்​கப்​பட்​டுள்​ள​தால் மாணவர்​கள் தவித்து வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து பள்​ளி​கள் ஜூன் 1-ம் தேதி திறக்​கப்​படும் என்று ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், வெயி​லின் தாக்​கம் அதி​க​மாக இருந்​த​தால் மாணவர்​கள் நலன்​கருதி பள்​ளி​கள் திறப்பை தள்​ளிவைக்க வேண்​டுமென்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது. ஆனால், 3 நாட்​கள் மட்​டுமே இடைவெளி​விட்டு ஜூன் 4-ம் தேதி பள்​ளி​கள் திறக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கின்​றன. பள்​ளிக்​கல்​வித் துறை​யின் இந்த நடவடிக்கை பெற்​றோர் மத்​தி​யில் கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வழக்​க​மாக ஜூன் மாதங்​களில் வெயில் குறைந்து தென்​மேற்​குப் பரு​வ​மழை தொடங்​கி​விடும். ஆனால், இந்​தாண்டு வெயில் தாக்​கம் குறை​யாத​தால் பள்​ளிக்​குச் செல்​லும் மாணவர்​கள் கடும் வெப்​பத்​தால் சோர்​வடைகின்​றனர். குறிப்​பாக 10 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் இந்த வெப்​பத்தை தாங்க முடி​யாமல் கடும் தவிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். பல்​வேறு பள்​ளி​களில் வகுப்​பறை​களில் போதிய காற்​றோட்​டம் இல்​லாத நிலை​யிலும், மின்​வெட்டு ஏற்​படும் சமயங்​களி​லும் குழந்​தைகள் வியர்​வை​யில் நனைகின்​றனர்.

அதிக வெப்​பம், போதிய அளவு தண்​ணீர் குடிக்​காத​தால் குழந்​தைகளுக்கு நீரிழப்​பு, மயக்​கம் மற்​றும் சரு​மப் பிரச்​சினை​கள் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக மருத்​து​வர்​கள் எச்​சரிக்​கின்​றனர். மேலும், வெப்ப அலை காரண​மாக மிகுந்த சோர்​வுடன் மாணவர்​கள் வீடு​களுக்​குத் திரும்​புவ​தாக பெற்​றோர் வேதனை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து பெற்​றோர் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள் கூறும்​போது, “சில ஆண்​டு​களாகவே கோடை முடிந்த பிறகும் கடுமை​யான வெப்​பம் நில​வு​கிறது. இதனால் 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை ஜூன் 10 முதல் 14-ம் தேதி வரையே பள்​ளி​கள் திறக்​கப்​பட்​டன. ஆனால், இந்த ஆண்டு 3 நாட்​கள் மட்​டுமே தள்​ளிவைக்​கப்​பட்​டது.

பெரிய​வர்​களுக்கே இந்த வெயில் சவாலாக உள்ள நிலை​யில், பள்​ளி​கள் திறப்​பில் கல்​வித்​துறை ஏன் இவ்​வளவு அவசரம் காட்​டியது எனத் தெரிய​வில்​லை. எனவே, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்​தைகளுக்கு மட்​டு​மாவது வெயில் குறை​யும் வரை விடு​முறை தரவேண்​டும்” என்​றனர். இதற்​கிடையே தமிழகத்​தில் இது​வரை இல்​லாத அளவுக்கு கடந்த ஏப்​ரல் முதலே பல்​வேறு மாவட்​டங்​களில் வெயில் தகித்து வரு​கிறது. தின​மும் ஏதேனும் ஒரு நகரத்​தில் 104 டிகிரிக்கு மேல் வெப்​பநிலை பதி​வாகிறது. வேலூர், சென்​னை, திருச்​சி, கடலூர் உள்பட வட தமிழகம் மற்​றும் கடலோர மாவட்​டங்​களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்​பநிலை பதி​வாகி வரு​கிறது.

இதுகுறித்து இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​மண்​டலத் தலை​வர் சிவானந்த பை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய​தாவது: நகரங்​களில் அதி​கரித்​து​வரும் கான்​கிரீட் கட்​டிடங்​களால், வெப்​பத்தை உள்​வாங்​கும் பசுமைப் பரப்​பு​கள் குறைந்​து​விட்​டன. மேலும், காற்​றில் ஈரப்​ப​தம் அதி​க​மாக இருப்​ப​தால், வெப்​பத்​தால் அந்த ஈரப்​ப​தம் சூடாகி, சுற்​றுப்​புற வெப்​பநிலை இயல்​பை​விட அதி​க​மாக உணரப்​படு​கிறது. இதை ‘வெட் பல்ப்’ வெப்​பநிலை என்​கிறோம். அதாவது. ஒரு நகரத்​தின் அதி​கபட்ச வெப்​பநிலை 40 டிகிரி எனில், காற்​றில் உள்ள ஈரப்​ப​தத்​தால் அது மேலும் அதி​க​மாக இருப்​பது போன்று உணர முடி​யும்.

இதுத​விர தென்​மேற்​குப் பரு​வ​மழை காரண​மாக தமிழக கடலோரப் பகு​தி​களில் காற்று வீசும் திசை​யில் மாற்​றம் ஏற்​பட்​டது. அதனால் கடலில் இருந்து நிலப்​பரப்பை நோக்கி வீசும் ஈரப்​ப​தம் மிகுந்த கிழக்கு திசை கடல் காற்று வீசுவது குறைந்​தது. தமிழக நிலப்​பரப்​பில் இருந்து மேற்கு திசை காற்று வங்​கக்​கடலை நோக்கி வீசத் தொடங்​கியது. இதனால் வட தமிழகத்​தின் உள் மாவட்​டங்​கள்​, கடலோர மாவட்​டங்​களில்​ வெயில் அதி​க​மாகப்​ பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT