கோப்புப் படம்

 
தமிழகம்

82 நிலையங்களில் ‘சிசிடிவி’ பொருத்தும் பணி தீவிரம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், 82 ரயில் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில், தற்போது, 59 ரயில் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மேலும் 82 ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை, வ.உ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், நந்தியம்பாக்கம், மீஞ்சூர்,அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, வியாசர்பாடி ஜீவா,பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், வேப்பம்பட்டு, ஏகாட்டூர், கடம்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

ரயில் நிலைய நடைமேடைகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், டிக்கெட்அலுவலகங்கள், நடைமேம் பாலங்கள் மற்றும் பயணிகள் கூடும் இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT