தமிழகம்

சைதாப்பேட்டை சிறையில் கைதிகள் திடீர் மோதல்: 27 பேர் புழல் சிறைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சை​தாப்​பேட்டை கிளை சிறை​யில் கைதி​கள் இடையே ஏற்​பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்​தனர்.

சென்னை புழல் மத்​திய சிறை​யில் இடப்​பற்​றாக்​குறை காரணமாக, அங்கு அடைக்​கப்​பட்​டிருந்த 23 கைதி​கள் கடந்த வாரம் சைதாப்​பேட்டை கிளை சிறைக்கு மாற்​றப்​பட்​டனர். அங்கு போதிய இடவசதி இல்லை எனக் கூறிய அவர்​கள், தங்​களை மீண்டும் புழல் மத்​திய சிறைக்கு மாற்ற வேண்​டும் என்று சிறை நிர்​வாகத்​திடம் கோரிக்கை விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால், இதுதொடர்​பாக சிறை நிர்​வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரி​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த புழல் சிறையி​லிருந்து மாற்​றப்​பட்ட கைதி​கள், நேற்று முன்​தினம் காலை சைதாப்​பேட்டை கிளை சிறை​யின் சமையல் அறை​யில் உணவு தயாரித்​துக் கொண்டிருந்த 4 கைதி​களைத் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அப்போது ஒரு​வரையொரு​வர் சரமாரி​யாகத் தாக்​கிக் கொண்டதில் 4 கைதி​கள் காயமடைந்​தனர். இதைக் கண்ட சிறைக் காவலர்​கள் விரைந்து சென்று இரு தரப்​பினரை​யும் சமாதானப்​படுத்​தினர். மேலும், காயமடைந்த 4 கைதி​களை​யும் மீட்டு சிகிச்​சைக்​காக அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இதையடுத்​து, சிறைத்​துறை டிஐஜி பழனி சைதாப்​பேட்டை கிளை சிறைக்​குச் சென்​று, அங்​குள்ள கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்து விசா​ரணை நடத்​தி​னார். பின்​னர், புழல் மத்​திய சிறையி​லிருந்து மாற்​றப்​பட்ட 23 கைதி​கள் மற்​றும் மோதலில் காயமடைந்த 4 கைதி​கள் என மொத்​தம் 27 பேரை​யும் மீண்​டும் புழல் மத்​திய சிறைக்கு மாற்ற உத்​தர​விட்​டார்.

இதன்​படி, சிறை அதி​காரி​களின் உத்​தர​வின்​பேரில், 27 கைதிகளை​யும் போலீ​ஸார் பலத்த பாது​காப்​புடன் நேற்று முன்தினம் மாலை புழல் மத்​திய சிறைக்கு அழைத்​துச் சென்று அடைத்​தனர். இதற்​கிடையே, இந்த மோதல் சம்​பவம் தொடர்​பாக கைதி​கள் ஜோசு​வா, சஞ்​சய் என்ற ஜாங்​கோ, கு​மார், விக்​னேஷ், சூர்​யா, அருண், சதீஷ், தினேஷ்கு​மார், வெள்ள சரத், வசந்​தகு​மார் உள்​ளிட்​டோரிடம்​ சிறைத்​துறை நிர்​வாகம்​ வி​சா​ரணை நடத்​தி வருகிறது.

SCROLL FOR NEXT