ஈரோடு: இலங்கையில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் செஸ் சாம்பியன் ஷிப் 2026 போட்டி நேற்று நிறைவடைந்தது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஈரோடு பா.இனியன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தலா 7 ஆட்டங்களில் 6.5 புள்ளிகள் பெற்று இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
ரேபிட் பிரிவில் ஸ்ரீஹரி வெள்ளிப்பதக்கத்தையும், மித்ரபா வெண்கலத்தையும் வென்றனர்.
பிளிட்ஸ் பிரிவில் ரோஹித் கிருஷ்ணா வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கிளாசிக்கல் பிரிவில் மித்ரபா சாம்பியன்பட்டம் வென்றார். ரணிந்து லியானகே வெள்ளிப்பதக்கத்தையும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.