தமிழகம்

10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்​டப் படிப்பு முடித்​தவர்​கள் வரை அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் உள்ள அரசு போட்​டித் தேர்வு மையங்களில் இலவச பயிற்​சி​யில் சேரு​வதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு நேற்று தொடங்​கியது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் பயிற்சித் துறை தலை​வர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: டிஎன்​பிஎஸ்​சி, எஸ்​எஸ்​சி, ஆர்​ஆர்​பி, ஐபிபிஎஸ் ஆகிய தேர்வு வாரி​யங்​கள் நடத்​தும் போட்​டித் தேர்​வு​களில் கலந்​து​கொள்​ளும் தமிழகத் தேர்​வர்​களுக்கு சென்​னை​யில் உள்ள அரசு போட்​டித் தேர்​வு​கள் பயிற்சி மையங்​களில் இலவச பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

பழைய வண்​ணாரப்​பேட்டை சர் தியாக​ராஜர் கல்​லூரி மையத்​தில் 500 பேர், சேப்​பாக்​கம் மாநிலக் கல்​லூரி மையத்​தில் 300 பேர் பயிற்சி பெறலாம்.

இதற்​கான வகுப்​பு​கள் வார வேலை நாட்​களில் தின​மும் பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறும். பயிற்​சிக் காலம் 6 மாதங்​கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றவர்​கள் முதல் பட்​டப் படிப்பு முடித்​தவர்​கள் வரை சேரலாம். எஸ்​எஸ்​எல்சி மதிப்​பெண், இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் சேர்க்கை நடை​பெறும். உணவு, தங்​கும் வசதியை விண்​ணப்​ப​தா​ரர்​களே ஏற்​பாடு செய்​து​கொள்ள வேண்​டும்.

இப்​ப​யிற்​சி​யில் சேரு​வதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு 26-ம் தேதி (நேற்​று) தொடங்​கி​யுள்​ளது. விண்​ணப்​பிக்க கடைசி நாள் செப்​.16-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை www.cecc.in என்ற இணை​யதளத்​தில் விரி​வாக அறிந்​து​கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT