தமிழகம்

சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாய நீதிபதியாக இந்தியர் தேர்வு

செய்திப்பிரிவு

நியூ​யார்க்: ஐ.நா. சபைக்​கான இந்​திய தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறியிருப்பதாவது: நியூ​யார்க்​கில் நடை​பெற்ற தேர்​தலில், சர்​வ​தேச கடல் சட்ட தீர்ப்​பா​யத்​தின் நீதிப​தி​யாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிமல் படேலுக்கு வாழ்த்​துகள். அவரது இந்​தத் தேர்​வு, கடல் சட்​டங்​கள் மீதான இந்​தி​யா​வின் நீண்​ட​கால அர்ப்​பணிப்பை காட்​டு​கிறது. அவருக்கு ஆதரவு அளித்த நாடு​களுக்​கு நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளது.

பிமல் படேல் தற்​போது ஐ.நா. சர்​வ​தேச சட்ட ஆணை​யத்​தின் உறுப்​பின​ராக​வும் ராஷ்டிரிய ரக் ஷா பல்​கலைக்​கழக துணைவேந்​தர் மற்​றும் பொது சர்​வ​தேச சட்​டப் பேராசிரிய​ராக​வும் உள்​ளார். மேலும் பிரதமர் அலு​வல​கத்​தின் கீழ் செயல்​படும் தேசிய பாது​காப்பு ஆலோ​சனைக் குழு, தேசிய பாது​காப்பு கவுன்​சில் செயல​கம் ஆகிய​வற்​றில் உறுப்​பின​ராக உள்​ளார்.

SCROLL FOR NEXT