தமிழகம்

காங்கிரஸின் ‘நட்பு போட்டி’ - புதுச்சேரியில் சிதறியது இண்டியா கூட்டணி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் - திமுக கூட்​ட​ணி​யில் திமுக 6 இடங்​களை கைப்​பற்றி எதிர்க்​கட்சி அந்​தஸ்தை பெற்​றது. நீண்​ட​கால​மாக ஆளும்​கட்​சி, எதிர்க்​கட்சி அந்​தஸ்​தில் இருந்து வந்த காங்​கிரஸ் இரு இடங்​களில் மட்​டும் வெற்றி பெற்று பின்​னுக்கு தள்​ளப்​பட்​டது. திமுக பிர​தான எதிர்க்​கட்​சி​யானது. திமுகவே எதிர்த்​தரப்​பில் பெரிய கட்சி என்ற அந்​தஸ்தை பெற்​றது.

அன்று முதல் திமுக - காங்​கிரஸ் இடையே பனிப்​போர் நிலவி வரு​கிறது. அதன்​பின் வந்த மக்​கள​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் ஜெயிக்க, தாங்​களே காரணம் என திமுக தெரி​வித்​தது.

          

இந்த நிலை​யில் தேர்​தல் நெருங்க, நெருங்க, காங்​கிரஸ் - திமுக இடையே, ‘கூட்​ட​ணிக்கு யார் தலை​மையேற்​பது?’ என்​ப​தில் போட்டா போட்டிநில​வியது. தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை நீண்ட இழுபறி​யாக சென்​றது. வேட்பு மனு தாக்​கல் முடிந்த பின்​னரும் பேச்சு தொடர்ந்​தது.

கடைசி​யாக காங்​கிரஸ் 16 தொகுதி​களை எடுத்து கொண்​டு, மீதி 14 தொகு​தி​களை திமுக​வுக்கு கொடுத்து அதில் இரு தொகு​தி​களை கூட்​ட​ணிக்கு வழங்​கியது. அதி​லும் இந்​திய கம்​யூனிஸ்ட் கேட்ட தொகு​தியை திமுக தரவில்​லை. விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட தொகு​தி​யில் காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது. ஏற்​கெனவே மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறி விட்​டது.

இந்த சூழலில் திமுக​வுக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களில் கூடு​தலாக காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சிக்​கான தொகு​தி​யில் போட்​டி​யிடும் காங்​கிரஸ் வேட்​பாள​ரும் வாபஸ் பெற மறுத்து விட்​டார்.

இந்த புது​வித​மான குழப்​பத்தை காங்​கிரஸார் ‘நட்பு போட்​டி’ என்று குறிப்​பிடு​கின்​றனர். புதுச்​சேரிக்கு வருகை தந்த காங்​கிரஸ் செய்தி தொடர்​பாளர் டோலி ஷர்​மா, “ஒரே கூட்​ட​ணி​யில் ஒரு தொகு​திக்​குள்வேறு கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் போட்​டி​யிட்​டாலும், நட்​பாக காங்​கிரஸ் கட்​சி​யின் வேட்​பாளர்​களாக போட்​டி​யிடு​வது சில நேரங்​களில் நடந்து விடும்.

இது ‘நட்பு போட்​டி” என்று ஒரு விசித்​திர விளக்​கத்தை அளித்​தார். பிஹாரிலும் சில தேர்​தல்​களில் இது​போன்ற குழப்​பங்​கள் ஏற்​பட்​டு, கூட்​ட​ணிக்​குள் ‘நட்பு போட்​டி’ ஏற்​பட்​டிருப்​ப​தாக காங்​கிரஸார் முட்டு கொடுக்​கின்​றனர். காங்​கிரஸ் தொடங்கி வைத்த குழப்​பத்​தால், புதுச்​சேரி​யில் இண்​டியா கூட்​டணி என்​பதே இல்​லாமல் போய் விட்​டது. தற்​போது மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் காங்​கிரஸ் 22, தி​முக 13, மார்க்​சிஸ்ட் 2, இந்​திய கம்​யூனிஸ்ட்​ 1, விசிக 4 என 42 வேட்​பாளர்​கள்​ போட்​டி​யிடுகின்​றனர்​.

தமிழகத்திலும் நட்பு போட்டியா..? - காங்கிரஸின் இந்த ‘நட்பு போட்டி’ ‘ஃபார்முலா’வால் திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கோபத்தில் உள்ளன.

புதுச்சேரியில் உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சிக்கல் தமிழக கட்சித் தலைமைகளுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் இது கசப்பை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

“இண்டியா கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம்.

SCROLL FOR NEXT