தமிழகம்

ஜவுளி உற்பத்தியை 350 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர்: இந்​திய ஜவுளி உற்​பத்​தியை வரும் 2031-ம் ஆண்​டுக்​குள் 350 பில்​லியன் டால​ராக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் தெரி​வித்​துள்​ளார்.

திருப்​பூர் ஏற்​றும​தி​யாளர்​கள் சங்க அலு​வல​கத்​தில் நடை​பெற்ற தொழில் துறை​யினருட​னான கலந்​துரை​யாடல் நிகழச்​சி​யில் பங்​கேற்​ற அவர், திருப்​பூரில் உற்​பத்​தி​யாகும் பின்​னலாடைகள், ஏற்​றுமதி வளர்ச்​சி, உற்​பத்​தித் திறன், தொழில்​நுட்ப வசதி​கள் மற்​றும் ஜவுளித் துறை​யின் தற்​போதைய நிலை குறித்து தொழில் துறை​யினர் அவரிடம் விளக்​கமளித்​தனர்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கிரி​ராஜ் சிங் கூறிய​தாவது: இந்​திய ஜவுளித் துறை​யின் ஒட்​டுமொத்த உற்​பத்தி மதிப்பை வரும் 2030-31-ம் நிதி​யாண்​டுக்​குள் 350 பில்​லியன் டால​ராக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இலக்கை எட்​டு​வ​தில் திருப்​பூர் உள்​ளிட்ட தமிழகத்​தின் ஜவுளி மையங்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கும்.

இந்​தி​யா​வின் ஜவுளித் தொழிலில் தமிழகம் முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது. அதே வேளை​யில், வரும் 2030-31-ம் நிதி​யாண்​டுக்​குள் திருப்​பூரின் ஏற்​றுமதி மதிப்பை 100 பில்​லியன் டால​ராக உயர்த்​து​வதே இலக்​காகும். இதற்​காக மத்​திய மற்​றும் மாநில அரசுகள் இணைந்து பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன.

கைத்​தறி, கைவினைப் பொருட்​கள், பட்டு வளர்ப்​பு, ஜவுளி மற்​றும் பருத்​தித் துறை​களின் வளர்ச்​சிக்​காக மத்​திய மற்​றும் மாநில அரசுகள் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வரு​கின்​றன. இதன் ஒருபகு​தி​யாக விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்கா அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பருத்தி இறக்​குமதி வரி குறைக்​கப்​பட்​டிருப்​பது ஜவுளித் துறை​யின் வளர்ச்​சிக்கு கூடு​தல் ஊக்​க​மாக அமை​யும்.

தொழிலா​ளர் பற்​றாக்​குறை உள்​ளிட்ட சவால்​கள் இருந்​தா​லும், புதிய நவீன இயந்​திரங்​கள், சுதந்​திர வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மற்​றும் உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுத் திட்​டங்​கள் மூலம் அவற்றை சமாளிக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்​கா​வின் அடுத்​த கட்ட திட்​டங்​கள் மற்​றும் புதிய வசதி​கள் குறித்த அறி​விப்​பு​கள் விரை​வில் வெளி​யாகும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT