எஸ்.சேட்​டு

 
தமிழகம்

ரேஷன் கடைகளில் மது​ விற்பனை: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

செய்திப்பிரிவு

திருத்​தணி: திருத்​தணி சட்டப்பேரவை தொகு​தி​யில் சுயேச்​சை​யாக போட்​டி​யிட வேட்​புமனு தாக்​கல் செய்ய ஆர்​.கே.பேட்டை ஊராட்சி ஒன்​றி​யம், வீரமங்​கலம் பகு​தியை சேர்ந்த எஸ்.சேட்​டு, திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் வேட்​புமனு தாக்​கல் செய்​தார்.

பிறகு, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: ரூ.25 ஆயிரத்​துக்கு மேல் மாத ஊதி​யம் பெறும் மத்​திய, மாநில அரசு ஊழியர்​களின் குடும்ப அட்​டைகளுக்கு வழங்கப்​படும் இலவசம் மற்​றும் மானி​யத்தை ரத்து செய்ய பரிந்​துரைக்​கப்​படும். 99 நாட்​களில் அரசு கஜானா நிரப்​பப்​படும்.

ரேஷன் கடைகளில் மது​விற்​பனை செய்​யப்​படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT