தமிழகம்

அண்ணாமலை பல்கலை. ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2012 முதல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும்.

பதவி உயர்வுகள் மற்றும் ஏழாவது ஊதியக்குழு நிலுவை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதன்படி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT