தமிழகம்

மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் தனி​யார் மென்​பொருள், முதலீட்டு நிறு​வனங்​கள் வரி ஏய்ப்​பில் ஈடு​படு​வ​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, அந்​நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான 5 இடங்​களில் வரு​மான வரி அதி​காரி​கள் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

சென்னை பெருங்​குடி, கந்​தன்​ சாவடி பகு​தி​யில் செயல்​பட்டு வரும் 'சிபிஆர்இ' என்ற தனி​யார் நிறு​வனத்​தில் நேற்று காலை முதல் வரு​மான வரிச் சோதனை நடை​பெற்​றது.

ரியல் எஸ்​டேட், முதலீடு மற்​றும் பல்​வேறு சேவை​களை வழங்கி வரும் இந்​நிறு​வனத்​தில், வரு​மான வரி அதி​காரி​கள் வரவு செலவு கணக்​கு​களை ஆய்வு செய்​தனர். இதே​போல், பெருங்​குடி குளோபல் இன்​போசிட்டி பார்க்​கில் உள்ள சில மென்​பொருள் நிறு​வனங்​களி​லும் அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

ஓஎம்​ஆர் சாலை​யில் இயங்கி வரும் 'டேக் இந்​தியா பிரைவேட் லிமிடெட்' என்ற வெளி​நாட்டு நிறு​வனத்​தி​லும் வரு​மான வரி அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

விளம்​பரம், வெளி​யீடு, சந்​தைப்​படுத்​தல் துறை​யில் முன்​னணி​யில் உள்ள இந்​நிறு​வனம், வரி ஏய்ப்பு செய்​த​தாகக் கூறப்​படும் புகாரின் அடிப்​படை​யில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சோதனை​யில், நிறு​வனங்​களின் நிதி பரி​மாற்​றங்​கள் தொடர்​பான பல முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றி​யுள்​ள​தாகத் தெரி​கிறது.

SCROLL FOR NEXT