தமிழகம்

திருச்சி கல்வி நிறுவனத்தில் வருமானவரி துறையினர் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர்.

திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் பகு​தி​யில் உள்ள இந்திரா கணேசன் கல்வி நிறு​வனத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

கல்வி நிறு​வனத்​துக்கு நேற்று மாலை 4.30 மணி​யள​வில் 2 கார்​களில் வந்த அதி​காரி​கள் தொடர்ந்து சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ராஜசேகரன் நேற்று காலை தனது பிரச்​சா​ரத்தை தொடங்​கிய நிலை​யில், மாலை​யில் அவருக்கு சொந்​த​மான கல்வி நிறு​வனங்​களில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி​யது பரபரப்பை ஏற்​படு​த்​தி உள்​ளது.

          
SCROLL FOR NEXT