கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலை தடுக்க மாநில முழுவதும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த ஆண்டு 25,521 பேர் டெங்கு காய்ச்லால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். தற்போது அதிகரித்துள்ள பாதிப்பு 2 மாதத்தில் குறையும்.
டெங்கு மட்டுமின்றி மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இல்லாமல் உடனே சிக்சிசைபெற வேண்டும். கொசு ஒழிப்புபணிகள் தீவிரமாக நடக்கிறது. பொதுமக்களும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.