தமிழகம்

நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியலில் 5,47,133 வாக்காளர்கள்

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 133 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய தேர்தல்‌ ஆணைய அறிவுரையின்‌ படி, சிறப்பு தீவிரத்‌ திருத்தம்‌ கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல்‌ தொடங்கியது. இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின்‌ பிறகு இறுதி வாக்காளர்‌ பட்டியல் இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிகளின்‌ பிரதிநிகளின்‌ முன்னிலையில்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டார்.

          

சிறப்பு தீவிர திருத்ததின்‌ போது, நீலகிரி மாவட்டத்தில்‌ 2025-ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அன்றைய நிலையில்‌ மொத்த 5 லட்சத்து 89 அயிரத்து 167 வாக்களார்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில்‌ 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 வாக்காளர்கள்‌ வரைவு வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம் பெற்றிருந்தனர்‌. இறுதி வாக்காளர் பட்டியலில் தற்போது 5 லட்சத்து 47 ஆயிரத்து 133 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள்‌ - 2,61,317, பெண்கள்‌ - 2,85,791 மற்றும்‌ மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ - 25.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் ஊட்டி தொகுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 425 வாக்காளர்களும், கூடலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 888 வாக்காளர்களும், குன்னூர் தொகுதியில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 820 வாக்காளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஊட்டி சட்டப்பேரவை தொகுதி: ஆண்கள் 89,066 (+2122 கூடுதல்). பெண்கள் 98,348 (+2678). மற்றவர்கள் 11 (+1). மொத்தம் 1,87,425 (+4801).

கூடலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதி: ஆண்கள் 89,206 (+2917 கூடுதல்). பெண்கள் 94,675 (+3167). மற்றவர்கள் 7 (+4). மொத்தம் 1,83,888 (+6088).

குன்னூர் சட்டப்பேரவை தொகுதி: ஆண்கள் 83,045 (+1519 கூடுதல்). பெண்கள் 92,768 (+1647). மற்றவர்கள் 7(+2). மொத்தம் 1,75,820 (+3168).

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,33,076 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்த நிலையில், பெயர் சேர்ப்பு நீக்க உட்பட்ட பணிகளுக்கு பின்பு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 14 ஆயிரத்து 057 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

42,034 வாக்காளர்கள் குறைவு; சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் நீலகிரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அன்றைய நிலையில் இருந்த 5 லட்சத்து 89 ஆயிரத்து 167 வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, உள்ளிட்டற்றிற்காக வடிவங்கள் பெறப்பட்டன. இவை சரிபார்க்கப்பட்ட நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு முன்பிருந்த வாக்காளர் எண்ணிக்கையை விட 42 ஆயிரத்து 034 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுக்கு பிறகு 14 ஆயிரத்து 57 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர்‌ பட்டியல்‌ வெளியீட்டு நிகழ்வில்‌, கூடுதல்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மா.நாராயணன்‌, சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியர்‌ (பொது) ந.லோக நாயகி, அனைத்து வாக்காளர்‌ பதிவு அலுவலர்கள்‌, உதவி வாக்காளர்‌ பதிவு அலுவலர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிகளின்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டனர்‌.

SCROLL FOR NEXT