பல்லாவரம் பகுதியில் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே வேட்பாளர் வெங்கடேசன், உடன் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர் ராஜா உள்ளிட்டோர்.

 
தமிழகம்

பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

தாம்பரம்: பல்​லா​வரம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேசிய ஜனநாயக கூட்​டணி ஐஜேகே வேட்​பாளர் டி. வெங்​கடேசன் நேற்று பல்​லா​வரம் பேருந்து நிலை​யம் அருகே உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு பகு​தி​யில் வீடு வீடாக சென்று அதி​முக அரசின் சாதனை​கள் பற்றி எடுத்​துக் கூறி​யும், அதி​முக தலை​மை​யில் ஆட்சி அமைந்த உடன் தொகு​தி​யில் உள்ள ஒவ்​வொரு வீட்​டுக்​கும் ரூ.10 ஆயிரம் பெற்று தரு​வேன் என வாக்கு சேகரித்​தார்.

அதி​முக பொது செய​லா​ளர் பழனி​சாமி நல்​லாட்சி தரு​வதோடு, பெண்​களுக்​கான பாது​காப்பு நடவடிக்​கைகளுக்கு முக்​கி​யத்​து​வம் தரு​வார். பெண்​கள் அச்​சமின்றி வெளி​யில் நடமாடலாம். கொலை, கொள்ளை சம்​பவங்​கள் தடுக்​கப்​படும்.

கஞ்சா போதை இல்​லாத மாநில​மாக உரு​வாக்​கப்​படும். மீண்​டும் அதி​முக ஆட்சி அமைய இரட்டை இலை சின்​னத்​திற்கு வாக்​களித்து வெற்றி பெற வைக்​கு​மாறு கேட்டு கொண்​டார்.

அப்​போது, முன்​னாள் எம்​எல்ஏ ப. தன்​சிங், பல்​லா​வரம் பகுதி கழகச் செய​லா​ளர் ஜெய்​பிர​காஷ், கீழ்​கட்​டளை பகுதி கழகச் செய​லா​ளர் சந்​திரசேகர் ராஜா மற்​றும் ஏராள​மான நிர்​வாகி​கள் உடன் இருந்தனர்​.

SCROLL FOR NEXT