தமிழகம்

குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: குதிரை பேரம் உண்​மை​யாய் இருந்​தால் விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முகவை முழு​மை​யாக கைப்​பற்​று​வோம், 90 சதவீதம் நிர்​வாகி​கள் எங்​கள் பக்​கம் வர போகிறார்​கள் என ஆதவ் அர்​ஜுனா பேசி​யதற்கு இது​வரை​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி எது​வுமே சொல்​ல​வில்​லை.

குதிரை பேரம் உண்​மை​யாய் இருந்​தால் விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆளுநருக்கு அந்த அதி​காரம் இருந்​தால் அவர் அதில் உடனடி​யாக தலை​யிட வேண்​டும். இந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் ஒரே தேசம் ஒரே தேர்​தல் என்​கிற நிலை​யை அடைய, அதற்​கான சட்​டத்​தைக் கொண்​டுவர முயற்​சிப்​ப​தாக தெரி​கிறது.

ஏற்​கெனவே அதனை தொகுதி மறு​வரையறை மசோதா என்​கிற பெயரில் கொண்டு வந்​த​போது திமுக, காங்​கிரஸ், விடு​தலைச் சிறுத்​தைகள், இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஒற்​றுமை​யாக இருந்து அதனை முறியடித்​தோம். இப்​போதும் அந்த முயற்​சியை நாங்​கள் மேற்​கொள்​வோம்.

ஆனால், மேற்கு வங்​கத்​திலே திரிணா​முல் காங்​கிரஸ் நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் 20 பேரை அந்த கட்​சியி​லிருந்து வெளி​யேற்றி அரசி​யல் சூதாட்​டம் ஆடு​கிற நிலையைபார்க்​கிறோம்.

நாடாளு​மன்​றத்​துக்கு சென்​றால்​தான் இதுகுறித்து என்ன நிலை என்​பது தெரியவரும் என்​றாலும், நாங்கள் இந்த முறை​யும் அந்த முயற்​சியைமுறியடிப்​ப​தற்கு எல்லா முயற்​சிகளை​யும் மேற்​கொள்​வோம்.

அதி​முக​வில் இருந்து ஆட்​களை வெளி​யேற்ற முயற்சி நடக்​கிறது, குதிரை பேரம் நடக்​கிறது என்​கிற விவாதம் ஒரு​புறம்இருக்​கிறது என்​றாலும் கூட, அதி​முக​வுக்​குள் என்ன நடக்​கிறது என்​பது பற்றி அதி​முக தலை​வர்​கள் ஏன் வாய் திறக்​காமல் இருக்​கிறார்​கள்.

ஆவேசப்பட வேண்​டிய​வர்​கள், ஆத்​திரப்பட வேண்​டிய​வர்​கள், தவெகவுக்கு எதி​ராக கொந்​தளிக்க வேண்​டிய​வர்​கள் அமைதிகாப்​ப​தன் பொருள் என்ன, ஆளுநரிடம் சென்று மனு கொடுப்​பதை ஒரு கடமை​யாக செய்​கிறார்​களே தவிர, இதை ஒரு வெகுமக்​கள் கருத்​தாக மாற்​று​வதற்கு அவர்​கள் எந்த முயற்​சி​யும் எடுத்​த​தாக தெரிய​வில்​லை.

`எங்​கள் கட்​சியை சீர்குலைக்க பார்க்​கிறார்​கள், இதை அனு​ம​திக்க மாட்​டோம்' என்ற குரலும் எழவில்​லை. இதுகுறித்து பொது​மக்​களிடத்​தில் முறை​யீடும் செய்​ய​வில்​லை. குதிரை பேரம் நடை​பெறுகிறது என்​றால் அது குறித்து தவெக அல்​லது அதி​முக தலை​மை​யிடம் கேட்க வேண்​டும். திமுக ஈடு​படு​கிறது என்​றால் திமுக தலை​மை​யிடம்

கேட்க வேண்​டும். ஆனால் அவர்​களிடம் எந்​தக் கேள்​வி​யும் எழுப்​பாமல், இதிலே திரு​மாவளவன் என்ன சொல்​லுகிறார், அவர் ஏன் மழுப்​பு​கிறார் என்று திரிபு​வாதம்​ செய்​வது அர்த்​தமில்​லாதது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT