தமிழகம்

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 3,778 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்​பூர் ரயில் பெட்டி தொழிற்​சாலை​ நடப்பு நிதி​யாண்​டில் 3,778 பெட்​டிகளை தயாரிக்க திட்​ட​மிட்​டுள்​ளது.

பெரம்​பூர் ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்​சாலையில் (ஐசிஎஃப்), வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்​பில் தற்​போது அதிக கவனம் செலுத்​தப்​படு​கின்​றன.

இது​வரை இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு பணி நிறைவடைந்​துள்ள நிலை​யில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு பணி விரை​வில் தொடங்க உள்​ளது.

அந்த வகை​யில், பெங்​களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து 6 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்பட உள்​ளன. இதுத​விர, 2 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை ஐசிஎஃப் ஆலை​யில் சொந்​த​மாக தயாரிக்​கப்​பட​வுள்​ளன. இந்த வகை ரயில் தயாரிப்​ப​தற்​காக சுமார் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் நடப்பு நிதி​யாண்​டில் 3,778 பெட்​டிகளை தயாரிக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இது குறித்​து, சென்னை ஐசிஎஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: நடப்பு நிதி​யாண்​டில் 3,778 பெட்​டிகள் தயாரித்து வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​கபட்​ச​மாக, 2,270 நவீன எல்​எச்பி பெட்​டிகள், 8 வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில்​கள், 14 அம்​ரித் பாரத் ரயில்​கள், ஒரு சரக்கு மின்​சார ரயில் உள்​ளிட்​டவை அடங்​கும். தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தவிர, மற்ற ரயில்​களுக்​கான பெட்​டிகள் தயாரிப்பு பணி முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கிறது. நடப்​பு ஆண்​டுக்​​கான இலக்​கை எட்​டு​வோம்​ என்​ற நம்​பிக்​கை உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT