தமிழகம்

19 ஐஏஎஸ் அதி​காரி​கள் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 19 மூத்த ஐஏஎஸ் அலு​வலர்​கள் பணி​யிட மாற்​றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் வெளி​யிட்ட அறி​விப்​பு:

தமிழ்​நாடு மின்​வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், பயிற்​சித் துறை தலைமை இயக்​குந​ராக​வும், சுற்​றுச்​சூழல் துறை செயலர் சுப்​ரியா சாஹு, தமிழ்​நாடு தொழில் முனை​வோர் மேம்​பாடு, புத்​தாக்க நிறு​வனத்​தின் ஆணை​ய​ராக​வும், உயர்​கல்​வித் துறை செயலர் வி.அருண்​ராய், மின்​வாரி​யத் தலை​வ​ராக​வும் பணி​யிடம் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

தொழில் முனை​வோர் மேம்​பாடு நிறு​வனத்​தின் ஆணை​யர் தீரஜ் குமார், உயர்​கல்​வித் துறை செயல​ராக​வும், தகவல் தொழில்​நுட்​பத் துறை செயலர் பிரதீப் யாதவ், சிறு குறு நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை செயல​ராக​வும், பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை செயலர் காகர்லா உஷா, சுற்​றுச்​சூழல் துறை செயல​ராக​வும், சிறு குறு நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை செயலர் அதுல் ஆனந்த், தகவல் தொழில்​நுட்​பத் துறை செயல​ராகவும், மருத்​துவ சேவை​கள் கழகத்​தின் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் பி.உ​மா​நாத், தொழில், வர்த்​தகத் துறை ஆணை​ய​ராக​வும் இடம் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

தொழில், வர்த்​தகத் துறை ஆணை​யர் நிர்​மல் ராஜ், போக்​கு​வரத்துத் துறை செயல​ராக​வும், பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை சிறப்​புச் செயலர் இ.சுந்​தர​வல்​லி, அதே துறை​யின் முழுநேர செயல​ராக​வும், பேரிடர் மேலாண்​மைத் துறை செயலர் சிஜி தாமஸ் வைத்​யன், போக்​கு​வரத்​துத் துறை ஆணை​ய​ராக​வும், நில நிர்​வாகத் துறை ஆணை​யர் ஆர்​.கஜலட்​சுமி, மது​விலக்​கு துறை ஆணை​ய​ராக​வும், போக்​கு​வரத்துத் துறை செயலர் எம்​.வள்​ளலார், தொழிலா​ளர் துறை ஆணை​ய​ராக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

மது​விலக்​கு துறை ஆணை​யர் பூஜா குல்​கர்​னி, தமிழ்​நாடு உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டு வாரி​யத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​யாக​வும், சமூக நலத் துறை இயக்​குநர் மகேஸ்​வரி ரவிக்​கு​மார், கலை, பண்​பாட்​டுத் துறை இயக்​குந​ராக​வும், வீட்​டு​வச​தி துறை கூடு​தல் செயலர் டி.ரத்​னா, அறநிலை​யத் துறை கூடு​தல் ஆணை​ய​ராக​வும், போக்​கு​வரத்​துத் துறை இயக்​குநர் டி.​பாஸ்கர பாண்​டியன், அருங்​காட்​சி​யகங்​கள் இயக்​குந​ராக​வும்,

கலை, பண்​பாட்​டுத் துறை இயக்​குநர் ஆர்​.பிருந்தா தேவி, சமூக நலத் துறை இயக்​குந​ராக​வும், கோவை மாவட்ட கூடு​தல் ஆட்​சி​யர் வாகே சங்​கேத் பல்​வந்த், தமிழ்​நாடு தொழில் வளர்ச்சி நிறு​வனத்​தின் செயல் இயக்​குந​ராக​வும் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT