ராஜபாளையம்  ரமணா பள்ளியில் ‘தூக்கம் ஒரு வரம்’ புத்தகத்தை ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார். அருகில் நூல் ஆசிரியர் கு.கணேசன், பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அசிஸ்டென்ட் எடிட்டர் வி.தேவதாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

 
தமிழகம்

பல உடல் பிரச்சினைகளுக்குத் தூக்கம் மூலம் தீர்வு: ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன் கருத்து

‘தூக்கம் ஒரு வரம்’ நூல் வெளியீட்டு விழா

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: “மனிதர்​கள் எதிர்​கொள்​ளும் பல உடல் பிரச்​சினைகளுக்​குத் தூக்​கம் மூலம் தீர்வு காண முடியும்” என்று ஐஏஎஸ் அதி​காரி வீ.ப.ஜெயசீலன் குறிப்​பிட்​டார்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகம் சார்​பில் டாக்​டர் கு.கணேசன் எழுதிய, ‘தூக்​கம் ஒரு வரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ராஜபாளை​யம்  ரமணா பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது.

ஆசி​ரியர் எஸ்.சுதா வரவேற்​றார். பள்​ளித் தாளாளர் கிருஷ்ணவேணி கண்​ணன் தலை​மையில் நடை​பெற்ற விழா​வில், சென்னை பெருநகரப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் வீ.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்டு நூலை வெளி​யிட்​டார்.

விழா​வில் அவர் பேசிய​தாவது: மக்​களிடையே அறி​வியல் மனப்​பான்​மையை மேம்​படுத்​தும் வகை​யில், அறி​வியல் அறிவைப் பரப்​புவது அவ​சி​யம். அறி​வியல் மனப்​பான்மை கொண்ட குடிமக்​களை உரு​வாக்​கு​வது அடிப்​படை கடமை​களில் ஒன்று என்று இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தில் வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில் மருத்​துவ அறி​வியலை மிக எளிய மொழி நடை​யில் மக்​களிடம் பரப்​பும் நோக்​கில், டாக்​டர் கு. கணேசன் ஏராளமான கட்​டுரைகளை​யும் நூல்​களை​யும் தமி​ழில் எழுதி வரு​கிறார். அந்த வரிசையில் ‘தூக்​கம் ஒரு வரம்’ என்ற இந்த நூல் மிக முக்​கிய​மானது.

தூக்​கத்​தின் மகத்​து​வம் குறித்த உல​கின் சிறந்த பல மருத்​துவ ஆராய்ச்​சிக் கட்​டுரைகள் அடிப்​படை​யில் இந்த நூலை அவர் எழுதி​யிருக்​கிறார். மருத்​துவ உல​கின் தலைசிறந்த 5 கண்​டு​பி​டிப்​பு​களை விட சிறந்த மருந்து தூக்​கம்.

படிக்​கும் நேரத்தை விட தூங்​கும் நேரம் முக்​கிய​மானது என ஆராய்ச்சி முடிவு​கள் கூறுகின்​றன. ஒவ்​வொரு மனிதனும் புத்​துணர்வு பெறவும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்​றல் அதி​கரிக்​கவும், குறிப்​பாக, மிக ஆரோக்​கிய​மான வாழ்க்கை வாழவும் தூக்​கம் எவ்​வளவு பெரிய வரம் என்​பதை இந்​நூலில் நூலாசி​ரியர் விவரித்​துள்​ளார்.

உடலின் பல பிரச்​சினைகளுக்​குத் திருப்​தி​யான தூக்​கம் மூலம் தீர்வு காண்​ப​தற்​கான வழிகள் இந்த புத்​தகத்​தில் உள்​ளன. இவ்​வாறு அவர் பேசினார். தமிழ்​நாடு கலை இலக்​கியப் பெரு​மன்​றத்​தின் பொதுச் செய​லா​ளர் டாக்​டர் த.அறம் பேசுகை​யில், “பெண்​கள் பிறந்​தது முதல் பல ஹார்​மோன் பிரச்​சினைகளால் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

அத்​தகைய பெரும்​பாலான பிரச்​சினைகளுக்கு நிறைவான தூக்​கம் மூலம் தீர்வு காணலாம். அவற்றை பற்றி இந்​நூலில் விரிவாக எழுதப்​பட்​டுள்​ளது. சாமானியர்​கள் மட்​டுமின்றி மருத்​து​வர்​கள் பலருக்​கும் இந்​நூல் பெரிதும் பயன்​படும்” என்​றார்.

விழா​வில் பேசிய எழுத்​தாளர் கண்​மணி ராசா, “எவ்​வளவு நேரம் தூங்​கினோம் என்​பதை விட எவ்​வளவு நேரம் ஆழ்ந்த உறக்​கத்​தில் இருந்​தோம் என்​ப​து​தான் முக்​கியம். அது பற்றி இந்​நூலில் கூறப்​பட்​டுள்​ளது” என்​றார்.

நூலாசி​ரியர் டாக்​டர் கு.கணேசன் தனது ஏற்​புரையில், “இது​வரை 64 புத்​தகங்​கள் எழுதி​யுள்​ளேன். நான் மருத்​து​வம் படிக்​கும் போது தூக்​கம் பற்றி 6 பக்​கங்​கள்​தான் இருந்​தன.

எனது 40 ஆண்டு கால அனுபவங்​கள் மற்​றும் பல புத்​தகங்​களைத் தேடிப் படித்​ததன் மூலம், நம் மக்​களுக்கு ஏற்ற மொழிநடை​யில் ‘தூக்​கம் ஒரு வரம்’ என்ற இந்த நூலை எழுதி உள்​ளேன். இது அனைவருக்​கும் தேவை​யான ஒரு புத்​தகம்” என்​றார்.

விழா​வில் பள்ளி ஆசி​ரியர் அ.தனலட்​சுமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் அசிஸ்​டென்ட் எடிட்​டர் வி.தேவ​தாசன் உள்​ளிட்​டோர் பேசினர். விழா ஏற்​பாடுகளை பள்ளி முதல்​வர் அ.சுதா, நிர்​வாக அதி​காரி செந்​தாமரை கண்​ணன் உள்​ளிட்​டோர் செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT