தமிழகம்

“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” - பிரதமர் மோடி உரை

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியது: “மகளிர் மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டது.

மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற வாரிசு கட்சிகள் கொண்டாடினர். 21-ஆம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் நாட்டுப் பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் மசோதா தோற்கடிக்கப்பட்டதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக எதிர்காலத்தில் அனுபவிக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். மகளிரின் கவுரவத்தை எதிர்க்கட்சிகள் காயப்படுத்தியுள்ளது; இந்த அவமானத்தை பெண்கள் மறக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பெண்மணியின் மனதிலும் இந்த அவமானம் நிரந்தரமாக குடியிருக்கும். காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே கூறிவந்தன.

நாங்கள் வடக்கு, தெற்கு என பிரித்து பார்த்தது இல்லை. மகளிர் சக்தியை உதாசீனம் செய்து எதிர்க்கட்சியினர் பாவம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சியினர் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றார் மோடி.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

இதற்​காக, நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. இந்​நிலை​யில், மக்​களவை​யில் நேற்று காலை விவாதம் தொடர்ந்​தது. அதன்பின் மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு இருந்தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும். ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது.

நேற்​றைய வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. அது தோல்வி அடைந்ததால், மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்கெடுப்பு நடத்தப்படாமல் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT