மேட்டூர் அணை

 
தமிழகம்

மேட்டூர் அணையில் நீரியல் நிபுணர் ஆய்வு

செய்திப்பிரிவு

மேட்டூர்: மேட்​டூர் அணை​யில் நீரியல் மற்​றும் இயந்​திர​வியல் நிபுணர் குல்​சன் ராஜ் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அணை​யின் இடது மற்​றும் வலது கரைகள், ஆய்வு சுரங்​கம்,கவர்​னர் பாயின்ட், நீர்​மட்ட அளவீட்​டுக் கருவி​கள், தானி​யங்கிஅளவீட்​டுக் கருவி​கள், மேல் மற்​றும் கீழ்​மட்ட மதகு பகு​தி​கள்,நில அதிர்வு கருவி​கள் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களைஅவர் ஆய்வு செய்​தார்.

மேலும், அணை​யின் கட்​டு​மானம், நீர்​வெளி​யேற்ற அமைப்​பு​கள், அணைப் பாது​காப்பு அம்​சங்​கள், கண்​காணிப்​புக் கருவி​கள் மற்​றும் அவற்​றின் தரவு​கள் குறித்​தும் அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார். தொடர்ந்​து, படகு மூலம் சென்று மதகு​களைப் பார்​வை​யிட்​டார். ‘இந்த ஆய்வு அறிக்கை அடிப்​படை​யில் அணையை வலுப்​படுத்​தும் பணி​கள் மற்​றும் பாது​காப்பு நடவடிக்​கைகள் விரிவுபடுத்​தப்​படும்’ என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT