தமிழகம்

ஒரு பைசா செலவில் தங்க மோதிரம் சாத்தியமா? - ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் டெண்டர் பின்னணி

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்தை முதல்​வர் விஜய் செப்​.15-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளார். இத்​திட்​டத்​தின்​கீழ் தமிழகம் முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறக்கும் ஒவ்​வொரு குழந்​தைக்​கும் ஒரு கிராம் தங்க மோ​திரம் வழங்​கப்பட உள்​ளது.

முதல்​கட்​ட​மாக ஜூன் முதல் செப்​டம்​பர் வரையி​லான 4 மாதங்​களுக்கு 1,28,499 மோதிரங்​கள் கொள்​முதல் செய்​யப்பட உள்​ளன. தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​கள் கழகத்​தால் (TNMSC) கடந்த ஜூலை 14-ம் தேதி இத்​திட்​டத்​துக்​கான டெண்​டர் கோரப்​பட்​டது. இதில் 11 முன்​னணி நிறு​வனங்​கள் பங்​கேற்​றன.

தங்​கம் விலை​யைத் தவிர்த்​து, ஒரு மோதிரத்​துக்​கான செய்​கூலி, சேதா​ரம், காப்​பீடு, பேக்​கிங் மற்​றும் பிஐஎஸ் தரமுத்​திரை உள்​ளிட்ட அனைத்து செல​வு​களை​யும் நிறு​வனங்​கள் விலை​யாக குறிப்​பிட வேண்​டும் என்​பது டெண்​டர் நிபந்​தனை ஆகும்.

அதன்​படி வெறும் ஒரு பைசா என்ற மிகக் குறைந்த விலைப்​புள்​ளி​யில் தங்க மோதிரம் செய்து தரு​வ​தாக குறிப்​பிட்ட ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு 70 சதவீத​ம், அதே விலைக்கு செய்​துதர சம்​ம​தித்த கல்​யாண் ஜுவல்​லர்ஸ் நிறு​வனத்​துக்கு 30 சதவீத​ம் என மோதிரங்​கள் தயாரிக்க டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போதைய சந்தை சூழலில் வெறும் ஒரு பைசா செல​வில் தங்க மோதிரத்தை வடிவ​மைத்​துக் கொடுப்​பது சாத்​தி​ய​மா? சாதா​ரண​மாக ஒரு கிராம் தங்​கம் வாங்​கும்​போதே செய்​கூலி, சேதா​ரம் என கணிச​மான தொகை வசூலிப்​பார்​கள். அரசு விதி​முறை​யின்​படி, ஒரு மோதிரத்​துக்கு பிஐஎஸ் ஹால்​மார்க் முத்​திரைக்கு மட்​டுமே குறைந்​த​பட்​சம் ரூ.45 செல​வாகும். அதுத​விர, பேக்​கிங், போக்​கு​வரத்து செல​வு, காப்​பீடு போன்ற செல​வு​களை​யும் வெறும் ஒரு பைசா​வில் எப்​படி ஈடு​கட்ட முடி​யும் என்ற கேள்வி​கள் எழுந்​துள்​ளன.

வியா​பார தந்​திரம்: அதே​நேரம், ‘நகை நிறு​வனங்​கள் தங்​களுக்​கான பல கோடி நஷ்டத்தை ஏற்​ப​தன் பின்​னணி​யில் ‘பி​ராண்ட் புரமோஷன்’ திட்​டம் உள்​ளது. சுமார் 4.40 லட்​சம் குடும்​பங்​களுக்கு தங்​களது மோதிரம் சென்​றடைவது பெரிய விளம்​பரத்தை அந்த நிறு​வனங்​களுக்கு வழங்​கும். அரசின் திட்​டத்​தில் தங்​களை இணைத்​துக் கொள்​வ​தால் நிறு​வனத்​தின் நற்​பெயரும் உயரும்’ என பொருளா​தார வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

சென்னை தங்க, வைர நகை வியா​பாரி​கள் சங்​கத் தலை​வர் ஜெயந்​திலால் சலானி கூறும்​போது, “பொது​வாக ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரிப்​ப​தற்​கான செய்​கூலி, சேதா​ரம் ரூ.1,050 வரை வரும். ஆனால், இதை ஒரு பைசா​வில் செய்து தரு​வது 100 சதவீதம் சாத்​தி​யமே. அரசின்​ திட்​டத்​துக்​கு தங்​களால்​ முடிந்​த ஒரு உதவியை இந்​த நிறு​வனங்​கள்​ செய்​வ​தாக கருதலாம்​” என்​றார்​.

இதற்கிடையே, டெண்டர்கள் தொடர்பாக மத்திய நிதி அமைச்​சகத்​தின்​ கீழ் இயங்​கும் செலவினத் துறை கடந்த 2020-ல் தெளி​வான வழி​காட்டு நெறி​முறை​களை வழங்​கி​யுள்​ளது. அதன்​படி, ஒரு டெண்​டரில் குறிப்​பிடப்​பட்​டுள்ள விலை வழக்​கத்​துக்கு மாறாக மிகக் குறை​வாக இருந்​து, அதனால் பணியை தரமாக செய்ய முடி​யுமா என சந்​தேகம் எழுந்​தால் சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்​திடம் விரி​வான விலைப் பகுப்​பாய்வு மற்​றும் எழுத்​துப்​பூர்வ விளக்​கத்​தைக் கோர அதி​காரி​களுக்கு உரிமை உள்​ளது. தகுதி இல்​லை​யெனில் நிராகரிக்​க​வும் முடி​யும் என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில், டெண்​டர் எடுத்த நிறு​வனங்​கள் தங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை எப்​படி ஈடு​கட்​டப் போகின்றன என்​ப​தற்​கான தெளி​வான விளக்​கத்தை சுகா​தா​ரத் துறை பெற வேண்​டும். அதே​நேரம், நஷ்டத்தை ஈடு​கட்ட தங்​கத்​தின் தரம் அல்​லது எடை​யில் எந்த சமரச​மும் செய்​யப்​பட​வில்லை என்​பதை அரசு உறுதி செய்ய வேண்​டும்.

மோதிரங்​களின் தரம் மற்​றும் எடையை கடுமை​யான தரக்​கட்​டுப்​பாட்டு சோதனை​களுக்கு உட்​படுத்​திய பிறகே பயனாளி​களுக்கு வழங்க வேண்​டும். அதே​போல, வெளிப்​படைத் தன்​மையே இத்​திட்​டத்தை முழு​மை​யாக வெற்றி பெறச் செய்யும் என்​பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT