வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மஹால்.

 
தமிழகம்

வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலை புலிகள் தப்பியது எப்படி?

30 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை

வ.செந்தில்குமார்

வேலூர்: தமிழ்​நாட்​டில் உள்ள சிறைகளில் இருந்து கைதி​கள் அவ்​வப்​போது தப்பி ஓடும் சம்​பவங்​கள் நடந்து வரு​கிறது. சமீபத்​தில் தேனி கிளை சிறை​யில் இருந்து 17 கைதி​கள் ஒரே நேரத்​தில் தப்​பியது தமிழக அரசுக்கு பெரும் நெருக்​கடியை ஏற்​படுத்​தி​யது. இதேபோன்று, கடந்த 1995-ம் ஆண்டு வேலூர் கோட்​டை​யில் உயர் பாது​காப்பு மிகுந்த திப்பு மஹாலில் இருந்து விடுதலை புலிகள் இயக்​கத்​தினர் 43 பேர் சுமார் 153 அடி நீளம் சுரங்​கம் தோண்டி கும்​பலாக தப்​பிய சம்​பவம் இந்​தி​யளவில் இன்​றளவும் பேசும் பொருளாக இருந்து வரு​வதுடன், அமெரிக்​கா​வின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிலும் இந்த செய்தி வெளியாகி​யுள்​ளது.

தப்​பிய 43 பேர்: கடந்த 14-8-1995-ல் சென்னை மாம்​பலம் மற்​றும் எழும்​பூரில் நள்​ளிரவு ரோந்து காவல் துறை​யினரிடம் சிக்​கிய இலங்கை தமிழர்​கள் சந்​தேகத்​தின் பேரில் விசா​ரிக்​கப்​பட்​டனர். மாம்​பலத்​தில் சிக்​கிய ஒரு​வர் திடீரென சயனைடை விழுங்கி உயி​ரிழந்​தார். அதிர்ச்​சி​யடைந்த காவல் துறை​யினர் நடத்​திய விசா​ரணை​யில், வேலூர் கோட்​டை​யில் உள்ள திப்பு மஹாலில் இருந்து தப்​பிய விவரம் தெரிய​வந்​தது.

இந்த தகவல் தமிழக காவல் துறைக்கு பேரி​டி​யாக இருந்​தது. உடனடி​யாக, திப்பு மஹாலில் 15-08-1995-ல் நடத்​திய சோதனை​யில் 43 பேர் கும்​பலாக சுரங்கம் தோண்டி தப்​பியது தெரிய​வந்​தது.

சிதிலமடைந்த கண்காணிப்பு கோபுரம்.

இது​குறித்து வேலூர் வடக்கு காவல் நிலை​யத்​தில் திப்பு மஹால் பாது​காப்பு அதி​காரியான டிஎஸ்பி தாசன் அளித்த புகாரின்​பேரில் Cr.No: 889/95 U/S 224, 225B, 109 IPC 3(2) (G) of the foreigners act பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது. தப்பி ஓடிய​வர்​களை பிடிக்க மாநிலம் முழு​வதும் தேடுதல் வேட்டை நடத்​தப்​பட்​டது.

பாது​காப்​பில் கோட்டை விட்​ட​தாக கூறி அப்​போதைய வேலூர் மாவட்ட எஸ்.பி., அசுதோஷ் சுக்லா, டிஎஸ்பி தாசன் உட்​பட அதி​காரி​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். தமிழகம் முழு​வதும் நடத்​திய தேடுதல் வேட்​டை​யில் 22 பேர் மட்​டுமே பிடிபட்​டனர். மற்​றவர்​கள் இது​வரை சிக்​காத நிலை​யில், அவர்​கள் மீதான வழக்கு மட்​டும் வேலூர் நீதி​மன்​றத்​தில் கடந்த 30 ஆண்​டுகளாக நடந்து வந்​தது. கடந்த 6 மாதங்​களுக்கு முன்​புதான் அந்த வழக்கு கிடப்பில் வைக்க உத்​தர​விடப்​பட்​டது.

153 அடி நீளம் சுரங்​கம்: 1993-ம் ஆண்டில் திப்பு மஹாலின் தரை தளத்​தின் ஒரு பகுதி அறை​யில் இருந்த விடுதலை புலிகள் அங்​கிருந்து சுரங்​கம் தோண்டி தப்​பிக்க திட்​டம் தீட்டி முயற்​சித்​துள்​ளனர். இதை காவல் துறை​யினர் கண்​டு​பி​டித்​ததும் அவர்​கள் வேறு​பகுதி அறைகளுக்கு மாற்​றப்​பட்​டனர். சுரங்​கம் தோண்ட முயற்சி நடந்த அறையும், அதற்கு அரு​கில் இருந்த அறைகள் என மொத்​தம் 3 அறைகளை​யும் காவல் துறை​யினர் பூட்டி ‘சீல்’ வைத்​தனர்.

இந்த பூட்​டிய அறைகளை குறிவைத்தே குணசீலன் என்​பவரது தலை​மையில் சுரங்​கம் தோண்டி தப்​பும் சதித்​திட்​டம் நடந்​துள்​ளது. திப்பு மஹாலில் காவல் துறை​யினரின் கண்​காணிப்பு இல்​லாத நேரத்​தில் முதல் தளத்​தில் இருந்த ஒரு அறை​யின் தரையை தோண்டி துளை​யிட்டு கீழ் தளத்​தில் ஏற்கெனவே பூட்டி ‘சீல்’ வைக்​கப்​பட்ட அறைக்கு சென்​றுள்​ளனர்.

திப்பு மஹாலில் உள்ள சிறைகளின் அறை.

அந்த அறை​யில் சுமார் 16 அடி பள்​ளம் தோண்​டியதுடன், 153 அடி நீளத்​துக்கு சுரங்கம் தோண்​டியுள்​ளனர். அங்​கிருந்து கோட்​டை​யின் அகழி​யின் கருங்​கல் சுவர் வரை சென்று மீண்​டும் மேல்​நோக்கி சுரங்​கம் தோண்​டியுள்​ளனர்.

ஜன்​னல் கம்​பிகள், சாப்​பிடும் தட்​டுகளை வளைத்து இரவு, பகலாக 2 ஆண்​டுகள் வரை சுரங்​கம் தோண்​டியுள்​ளனர். திப்பு மஹாலில் இருந்து முதற்​கட்​ட​மாக தப்​பிய சிலர் கடல் வழி​யாக இலங்​கைக்கு தப்பி விடுதலை புலிகள் முகாமுக்கு சென்​றதாக கூறப்​படு​கிறது. அவ்​வாறு சென்​றவர்​களை தங்​களது கட்​டளை இல்​லாமல் தப்​பியது ஏன் என்று விசா​ரணை நடத்தி சுட்​டுக்​கொன்​றதாக கூறப்​படு​கிறது.

உயர் பாது​காப்​பில் அலட்சியம்: திப்பு மஹால், ஹைதர் மஹால் அரு​கில் உயர் கோபுரம் அமைத்து 25 துப்​பாக்கி ஏந்​திய காவல் துறை​யினர் சுழற்சி முறை​யில் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். ‘க்யூ’ பிரிவு காவல் துறை​யினர் கண்​காணிப்​பும் இருந்​தது. அதையும் மீறி சுரங்​கம் தோண்​டிய மண்ணை தினந்​தோறும் குளியலறைக்கு சிறிது சிறிதாக எடுத்​துச் சென்று குளிக்​கும் நேரத்​தில் தண்​ணீரில் கரைத்து வெளியேற்​றியுள்​ளனர்.

வாரத்​தில் ஒரு நாள் ஒவ்​வொரு அறைகளாக ‘க்யூ’ பிரிவு காவல் துறை​யினர் செல்​லும்​போது முதல் தளத்​தின் தரையில் ஓட்​டை​இடப்​பட்ட பகுதி​யில் கருங்​கல்லை வைத்து சமையல் செய்துள்​ளனர். அறைகளுக்​குள் சென்று சோதனை நடத்த விடுதலை புலிகள் எதிர்ப்பு தெரி​வித்​ததால் காவல் துறை​யினர் வெளி​யில் இருந்​த​படியே ஆய்வு நடத்​தி​விட்டு சென்​றுள்​ளனர்.

வேலூர் கோட்டையில் திப்பு மஹாலில் இருந்து சுரங்கம் தோண்டி அகழியின் மதிற்சுவர் வழியாக தப்பிய இடம். படங்கள்: வி.எம்.மணிநாதன்.

ஒரு சமயம் பாது​காப்பு அதி​காரியான டிஎஸ்பி தாசன், பொது குளியலறை பகுதி​யில் இருந்து தண்​ணீர் வெளியேறும் கால்​வாய் பகுதி​யில் அடிக்​கடி வெவ்​வேறு நிறங்​களில் தண்​ணீர் வெளியேறுவதை கவனித் துள்ளார். ஆனால், அதுகுறித்து ஆய்வு நடத்​தாமல் விட்​டது பெரும் பிழை என்​பதை பின்​னாளில் டிஎஸ்பி தாசன் புரிந்து​ கொண்​டார்.

திப்பு மஹாலில் இருந்து 43 பேரும் 12-08-1995-ல் தொடங்கி 14-08-1995 வரை பகுதி, பகுதி​யாக தப்​பியுள்​ளனர். இத்​தனைக்​கும் வேலூர் கோட்​டை​யில்​தான் வேலூர் சரக டிஐஜி, எஸ்.பி., அலு​வல​கங்​கள், மாவட்ட நீதி​மன்​றம், உளவுத்​துறை அலு​வல​கங்​கள் இயங்கி வந்​துள்​ளன.

திப்பு மஹால், ஹைதர் மஹால்: விடுதலை புலிகள் (LTTE) மற்​றும் EPRLF குழுக்​கள் இடை​யில் மோதல் இருந்​து வந்தது. 19-06-1990 அன்று சென்னை கோடம்​பாக்​கத்​தில் EPRLF தலை​வர் பத்​ம​நாபாவை விடுதலை புலிகள் இயக்​கத்​தைச் சேர்ந்த சிவ​ராசன், சாந்​தன் உள்​ளிட்​டோர் அடங்​கிய கும்​பல் சுட்டு கொன்​றனர். இதில், 2 அப்​பாவி பொது​மக்​கள் உட்​பட 13 பேர் கொல்​லப்​பட்​டனர். 22 பேர் படுகாயம் அடைந்​தனர்.

இந்த சம்​பவத்​தால் தமிழகத்​தின் சட்​டம்-ஒழுங்கு கேள்​விக்​குறி​யாக மாறியது. தமிழக அரசுக்கு ஏற்​பட்ட கடும் நெருக்​கடி​யால் தமிழ்​நாட்​டில் சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்த விடுதலை புலிகள் இயக்​கத்​தினர் மற்​றும் அவர்​களின் தீவிர ஆதர​வாளர்​கள் மீதான தேடுதல் வேட்டை தொடங்​கியது.

இதில், பிடிபட்ட சுமார் 800 பேரில் குற்ற வழக்​கு​கள் எது​வும் இல்​லாத 190-க்​கும் மேற்​பட்​டோர் வேலூர் கோட்​டை​யில் உள்ள திப்பு மஹால், ஹைதர் மஹாலில் உயர் பாது​காப்​பில் தங்க வைக்​கப்​பட்​டனர். இதே, திப்பு மஹாலில் இருந்து 1992-ம் ஆண்டு 19 விடுதலை புலிகள் இயக்​கத்​தினர் தப்​பியுள்​ளனர் என்​ப​தும் குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT