தமிழகம்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகிறது: உள்துறை செயலர், டிஜிபி தகவல்

5 ஆண்டுகளில் பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் குற்​றச் செயல்​கள் வெகுவாக குறைந்​துள்ள நிலை​யில், குற்​றச்சம்​பவங்​கள் அதி​கரித்​துள்​ளது​போல் மிகைப்​படுத்​தப்​படு​வ​தாக உள்​துறை செயலர், டிஜிபி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார், சட்​டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் ஆகியோர் நேற்று கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் கொலை, ஆதாயக் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​கொடுமை உள்பட அனைத்து வகை​யான குற்​றச் செயல்​களும் பெரு​மளவு குறைந்​துள்​ளன. 2021-ல் 1,597 கொலை வழக்​கு​கள் பதி​வான நிலை​யில் 2025-ல் 1,461 ஆக குறைந்​துள்​ளது. இந்த இடைப்​பட்ட ஆண்​டு​களிலும் குறைந்​துள்​ளது. அதே​போல், இந்த ஆண்​டிலும் குற்​றங்​கள் குறைந்​துள்​ளன. ஆனால், குற்​றச்சம்​பவங்​கள் அதி​கரித்​துள்​ளது​போல் மிகைப்​படுத்​தப்​படு​கிறது.

          

பொது நிகழ்ச்​சிகள், கோயில் திரு​விழாக்​களில் ​கூட அசம்​பா​விதம் ஏற்​ப​டா​மல் தடுத்​துள்​ளோம். காவல்​துறையைப் பொறுத்​தவரை சிறிய குற்​றங்​களாக இருந்​தா​லும், பெரிய குற்​றங்​களாக இருந்​தா​லும் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. போக்சோ சட்​டம் தொடர்​பாக தற்​போது பெரு​மளவு விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது. பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தானாக முன்​வந்து புகார் அளிக்​கின்​றனர். இதனால், புகார்​களின் எண்​ணிக்கை அதி​க​மாகத் தெரிகிறது.

2021-ம் ஆண்​டில் 6,800 போதைப் பொருள் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்ட நிலை​யில், 2024-ம் ஆண்​டில் 11 ஆயிரம் வழக்​கு​களாக அதி​கரித்​துள்​ளன. போதைப் பொருள் தடுப்பு பணி​களை காவல்​துறை​யினர் தீவிரப்​படுத்​தி​ய​தாலேயே இந்த வழக்​கு​கள் அதி​கரித்​துள்​ளன.

சிவகங்​கை​யில் நடை​பெற்ற ஆகாஷ் காவல் நிலைய மரணம் தொடர்​பாக விசா​ரித்து வரு​கிறோம். காவல் நிலைய மரணங்​களை ஒரு​போதும் சகித்​துக் கொள்ள முடி​யாது. அதில், தொடர்புடைய காவலர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

பாலியல் வழக்​கில் உடனடி விசா​ரணை நடத்​தப்​பட்​டு, குற்​ற​வாளி​களுக்கு விரை​வில் தண்​டனை பெற்​றுக் கொடுக்​கப்​பட்டு வரு​கிறது. போதைப் பொருட்​களுக்கு எதி​ரான நடவடிக்​கை​யில் இந்​தி​யா​விலேயே தமிழகம் முன்​னிலை​யில் உள்​ளது.

நிரந்தர டிஜிபி விவ​காரத்​தில் தகு​தி​யுள்ள போலீஸ் அதி​காரி​களின் பட்​டியல் யுபிஎஸ்​சி-க்கு ஏற்​கெனவே அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் நிரந்தர டிஜிபி நியமிக்​கப்​படு​வார். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

சட்​டம் ஒழுங்கு கூடு​தல் டிஜிபி மகேஷ்வர் தயாள், சென்னை காவல் ஆணை​யர் அருண் ஆகியோர் உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT