தமிழகம்

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்​டிகை கொண்​டாட்​டம் காரண​மாக கோயம்​பேடு காய்​கறி சந்​தைக்கு நாளை (நவ.9) விடு​முறை விடப்பட்​டுள்​ளது.

கோயம்​பேடு சந்​தையில் 1200-க்​கும் மேற்​பட்ட காய்​கறி கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்த கடைகளுக்​குத் தினமும் சுமார் 3 ஆயிரம் டன்​னுக்கு மேற்​பட்ட காய்​கறிகள் விற்​பனைக்​காக கொண்டு வரப்​படு​கின்​றன. இந்த கடைகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை செய்கின்றனர்.

விவசாயிகள் தீபாவளி பண்​டிகை கொண்​டாடட்​டத்​தில் இருப்பதால், இன்று காய்​கறிகளைப் பறித்து அனுப்​பும் பணிகள் நடைபெறாது. மேலும் லாரி ஓட்​டுநர்​களும், கோயம்​பேடு சந்தை சுமை தூக்​கும் தொழிலா​ளர்​களும் தீபாவளி விடு​முறை​யில் சென்று விடுவார்​கள். அத​னால் கோயம்​பேடு காய்​கறி சந்​தைக்கு நாளை காய்​கறிகள் வராது.

இந்​நிலை​யில் கோயம்​பேடு காய்​கறி சந்​தைக்கு நாளை விடுமுறை விடுவது என முடிவெடுத்து இருப்​ப​தாக கோயம்​பேடு காய்​கறி அங்​காடி அனைத்து சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரி​வித்​துள்​ளார். அதே நேரம் மலர் மற்​றும் கனி சந்​தைகள் வழக்​கம் போல் இயங்​கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT