ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)

 
தமிழகம்

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2,000 கனஅடியாக உயர்வு

செய்திப்பிரிவு

தருமபுரி / மேட்டூர்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் கடந்த 14-ம் தேதி காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 400 கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்​து, 15-ம் தேதி 300 கனஅடி​யாக​வும், 16-ம் தேதி 200 கனஅடி​யாக​வும் சரிந்​தது. இந்​நிலை​யில் 17-ம் தேதி காலை விநாடிக்கு 700 கனஅடி​யாக உயர்ந்த நீர்​வரத்​து, நேற்று காலை 2,000 கனஅடி​யாக மேலும் அதி​கரித்​தது. ஒகேனக்​கல் மற்​றும் சுற்​று​வட்​டார வனப்​பகு​தி​களில் பெய்த மழை காரண​மாக நீர்​வரத்​தில் உயர்வு ஏற்​பட்​டுள்​ள​தாக பொதுப்​பணித்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 193 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 539 கனஅடி​யாக அதி​கரித்​தது. காவிரி கரையோர மாவட்​டங்​களின் குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. நீர் வரத்தை விட, நீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் நீர்​மட்​டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. அணை​யின் நீர்​மட்​டம் 79.16 அடியி​லிருந்து 79.10 அடி​யாக​வும், நீர்​ இருப்பு 41.12 டிஎம்​சியி​லிருந்து 41.07 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT