தமிழகம்

‘இந்து கோயிலுக்குள் பிற மதத்தினர் நுழைவது தடுக்கப்பட வேண்டும்’ - இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை: மாற்று மதத்​தினர் மத அடை​யாளங்​களு​டன் இந்து கோயில்​களுக்​குள் நுழைவதைத் தடுக்க உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என இந்து ஆலய பாது​காப்பு இயக்​கம் வலியுறுத்​தி​யுள்​ளது.

இந்து ஆலயப் பாது​காப்பு இயக்​கத்​தின் மாநிலப் பொருளாளர் எச்.ஆதிசேஷன் கூறிய​தாவது: திரு​வண்​ணா​மலை கோயி​லில் திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா ஏற்​பாடு தொடர்​பாக ஆய்வு செய்ய வந்த அமைச்​சர்​களு​டன், அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனாவின் உதவியாளர் என்ற பெயரில் தொப்பி அணிந்த இஸ்லாமியர் ஒரு​வர் கோயிலுக்​குள் நுழைய முயன்​றுள்​ளார். இதைக் கண்​டிக்​கிறோம். சமீபத்​தில், மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் மதுரை மத்​திய தொகுதி எம்​எல்ஏ முஸ்தபா தொப்​பியுடன் நுழைந்​தது சர்ச்​சைக்கு உள்​ளானது.

இந்​துக்​கள் அல்​லாத மாற்று மதத்​தினர் குறிப்​பாக இஸ்லாமியர்​கள், மத அடை​யாளங்​களு​டன் இந்து கோயில்​களுக்​குள் நுழைவது தன்​னிச்​சையாக நடை​பெறு​வதுபோல் தெரிய​வில்லை. அவ​மானப்​படுத்​தும் செயல் திட்​ட​மாகவே தெரி​கிறது. இந்து கோயில்​களில் பராமரிக்​கப்​படும் கையேட்​டில், மாற்று மதத்​தினர் முழு நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யில் கையெழுத்​திட்டு வழிபாடு நடத்​து​வதில் தவறில்லை. ஆனால், மத அடை​யாளத்​தோடு கோயில் வளாகத்​தில் நுழைவதை ஏற்​றுக்​கொள்​ளவே முடி​யாது.

இதில் அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் மவுனமாக இருப்​பது ஏற்​புடையது அல்ல. உடனடி​யாக விளக்​கம் அளிக்க வேண்​டும். மீண்​டும் இது போன்று நடக்​காது என்று உறுதி அளிக்க வேண்​டும். இது தொடர்​பாக அறநிலை​யத் துறை தெளிவான சுற்​றறிக்​கையை கோயில் செயல் அலு​வலர்​களுக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT