தமிழகம்

எமர்ஜென்சி காலத்தை போல செயல்படுவதா? - காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: எமர்ஜென்சி காலத்​தில் நட​வடிக்கை எடுத்​தது போல காவல்​துறை செயல்​படு​வ​தாக இந்து முன்​னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

காவல்​துறை நடவடிக்​கைக்கு கண்​டனம் தெரி​வித்து இந்து முன்​னணி​யின் எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கம்​யூனிஸ்ட் கூட்​டணி பாசத்​தால் தவெக அரசு பாசிசத்தை கடைபிடிக்​கிறது.

இந்​துமத துவேஷ நிகழ்ச்​சியை தடை செய்ய புகார் கொடுத்​தால் தடுப்பு காவலில் முடக்​கு​கிறது. தஞ்​சாவூரில் இந்து மதத்தை திட்​ட​மிட்டு இழி​வுபடுத்​தும் வகை​யில் மக்​கள் கலை இலக்​கிய கழகம் சார்​பாக நடை​பெற்ற நிகழ்ச்​சியை தடை செய்ய கோரி காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​ததற்​காக இந்து முன்​னணி திருச்சி கோட்ட செய​லா​ளர் குணசேகரனை காவல்​துறை அதி​காலை 3 மணிக்கு கைது செய்து மறு​நாள் இரவு 10.30 மணி வரை சட்​ட​விரோத தடுப்பு காவலில் வைத்​துள்​ளது.

அது​மட்​டுமின்​றி, உணவு குடிநீர் கூட கொடுக்​காமல் மிரு​கத்​தன​மான அடக்​கு​முறை​யில் ஈடு​பட்​டுள்​ளது காவல் துறை.

அரசி​யலமைப்பு சட்​டம் உறு​தி​யளித்​துள்ள வழி​பாட்டு உரிமை மற்​றும் மத கண்​ணி​யம் காக்க புகார் கொடுத்​தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டிய காவல்​துறை எமர்​ஜென்சி காலத்​தைப் போன்று புகார் கொடுத்த இந்து முன்​னணி பொறுப்​பாளரையே கைது செய்து சட்ட விரோத காவலில் அடைத்த செயலை இந்து முன்​னணி வன்​மை​யாக கண்​டிக்​கிறது. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT