தமிழகம்

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகைக் கடனுக்கான உச்சவரம்பு உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகைக் கடனுக்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகைக் கடன்களுக்கு ஒரு கிராமுக்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்கள் சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன் களுக்கான வட்டிக்கும், தொடக்கவேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவியது.

இதை சரிசெய்யும் வகையில் நகைக்கடனுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், அதன் கிளைகளில் பொதுமக்களுக்கு தரப்படும் நகைக்கடன் வட்டியைவிட குறைந்தது 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். அதேநேரம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT