தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு ஜம்மு காஷ்மீரில் கூட அனுமதி: அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மறுப்பது ஏன்?

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: தீ​விர​வாத அச்​சுறுத்​தல் இருக்​கும் ஜம்மு காஷ்மீரில் கூட ஆர்எஸ்எஸ் ஊர்​வலத்தை அனு​ம​திக்​கும்​போது அமை​திப்​பூங்​கா​வான தமி​ழ​கத்​தில் அனு​மதி மறுப்​பது ஏன்? என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நிறுவன தினத்தை முன்​னிட்டு அக்​.18 அல்​லது அக்​.25 அல்​லது நவ.1 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் தமி​ழ​கம் முழு​வதும் ஆர்​எஸ்​எஸ் சார்​பில் ஊர்​வலம் நடத்த அனு​மதி கோரி தமிழக டிஜிபி​யிடம் மனு அளித்​தும் எந்த பதி​லும் இல்லை எனக்​கூறி ஆர்​எஸ்​எஸ் மாநிலச் செய​லா​ள​ர் ஜெகதீசன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனுதா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா மற்​றும் வழக்​கறிஞர் ரபு மனோகர் ஆகி​யோர், ‘‘ஒவ்​வொரு ஆண்​டும் இந்த பிரச்​சினை வந்​து​விடு​கிறது.

ஆர்எஸ்எஸ் ஊர்​வலத்​துக்கு அனு​மதி அளிக்க வேண்​டுமென ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் அனு​மதி மறுக்​கப்​படு​கிறது’’ என்​ற​னர்.

காவல்​துறை தரப்​பில் ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், ‘‘ஊர்​வலம், போராட்​டம் போன்​றவற்​றுக்கு அனு​மதி கோரி 21 நாட்​களுக்கு முன்​பாக விண்​ணப்​பிக்க வேண்​டும்.

ஆனால், அக்​.3-ம் தேதி​தான் மனு​தா​ரர் விண்​ணப்​பித்​துள்​ளார். ஊர்​வலத்​துக்கு அனு​மதி கேட்​கும் வழித்​தடங்​கள் அனு​ம​திக்க முடி​யாத பகு​தி​களாக உள்​ளன. தீபாவளி பண்​டிகை காலத்​தில் இது​போன்ற ஊர்​வலங்​களுக்கு அனு​ம​தி​யளித்​தால் அது பொது​மக்​களுக்கு அசவு​கரி​யத்தை ஏற்​படுத்​தும்’’ என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, ‘‘ஆண்​டு​தோறும் ஆர்​எஸ்​எஸ் ஊர்​வலத்​துக்கு அனு​ம​தி​யளிக்க வேண்​டுமென்ற சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவை உச்ச நீதி​மன்​ற​மும் உறுதி செய்​துள்ள நிலை​யில், போலீ​ஸார் அனு​மதி மறுப்​பது ஏன்? எந்​தக்​கட்சி ஆட்​சிக்கு வந்​தா​லும் ஆர்​எஸ்​எஸ் என்​றாலே அனு​மதி மறுத்து விடு​கின்​ற​னர்.

அரசி​யல் கட்​சி​களின் போராட்​டத்​துக்கு அனு​மதி மறுக்க, மறுக்க அது ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக மாறி​விடும். தீவிர​வாத அச்​சுறுத்​தல் இருக்​கும் ஜம்மு காஷ்மீரிலும் கூட ஆர்​எஸ்​எஸ் ஊர்​வலத்​துக்கு அனு​ம​தி​யளிக்​கும்​போது அமை​திப்​பூங்கா என கூறப்​படும் தமி​ழ​கத்​தில் மட்​டும் ஏன் அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

இதன்​மூலம் தேவை யற்ற விளம்​பரத்தை அரசே ஏற்​படுத்தி வரு​கிறது’’ என்​றார், மேலும், இந்த விவ​காரம் தொடர்பாக மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.ஜான் சத்​ய​னுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தும்​படி மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர்​களுக்கு உத்​தர​விட்ட நீதிப​தி, விசா​ரணையை இன்​றைக்கு (அக்​.15) தள்​ளி​வைத்​துள்​ளார்.

அரிசி ஆலைக்கு எதி​ராக போராட்​டம்

மயி​லாடு​துறை மாவட்​டம் சித்​தர்​காடு பகு​தி​யைச் சேர்ந்த அன்​பு​ராஜ் உயர் நீதி​மன்​றத்​தில், ‘‘உயர் நீதி​மன்ற உத்​தரவை மீறி தங்​களது கிரா​மத்​தில் செயல்​படும் தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிப கழகத்​தின் நவீன அரிசி ஆலை​யால் சுற்​றுச்​சூழல் மாசடைந்து வரு​கிறது.

எனவே அந்த ஆலைக்கு எதி​ராக மயானத்​தில் போராட்​டம் நடத்த போலீ​ஸார் அனு​மதி மறுத்து விட்​டனர்’’ என மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், ‘‘ஆலை​யால் ஏற்​படும் மாசு​வைத் தடுக்க அரசின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில் கிரா​மத்​தினர் மயானத்​தில் நின்று போராட்​டம் நடத்த அனு​மதி கோரி​னால் அதில் போலீ​ஸாருக்கு என்ன பிரச்​சினை? அங்கு அடக்​கம் செய்​தவர்​கள் எழுந்து நின்று இங்கு போராட்​டம் நடத்​தக்​கூ​டாது என எதிர்ப்பு தெரிவிக்​கின்​ற​ன​ரா? அரசி​யல் கட்​சி​யினரும் அனு​மதி கோரி நீதி​மன்​றத்​தைத்​தான் நாடு​கின்​ற​னர்.

போ​ராட்​டம் நடத்த எங்​கும் அனு​ம​தி​யளிக்​க​வில்லை என்​றால், உயர் நீதி​மன்​றத்​தின் முன்​பாக அனு​ம​தி​யளிக்க வேண்​டிய நிலை​தான்​ ஏற்​படும்​’’ எனக்​கூறி வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளிவைத்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT