தமிழகம்

தமிழகத்தில் அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்​தில் அடுத்த பருவமழை தொடங்​கும் முன்பு சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​ற​வும், இப்​பணியை மேற்​பார்​வை​யிட ஓய்வுபெற்ற நீதிப​தி​களை நியமனம் செய்​தும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றக்​கோரி மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ உள்​ளிட்ட பலர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் 11 ஆண்​டு​களுக்கு முன்பு பொது நல வழக்கு தொடர்ந்​தனர்.

          

இந்த வழக்​கை விசாரித்த நீதிபதி சதீஷ்கு​மார், பரதசக்​கர​வர்த்தி அமர்வு நேற்று பிறப்​பித்த உத்தர​வு: தமிழகத்​தில் சீமைக் கரு​வேல மரங்​களை இயந்​திரம் மூலம் வேரோடு பிடுங்கி அப்​புறப்​படுத்த வேண்​டும்.

சீமைக் கரு​வேல மரங்​கள் அகற்​றப்​பட்ட இடங்​களில் செழுமை கரு​வூலம் என்ற பெயரில் உள்​ளூர் மரங்​களை நட்டு பராமரிக்க வேண்​டும். சீமைக் கரு​வேல மரங்​கள் அகற்​றும் பணிக்​காக தனி வலைதளம் தொடங்கி அதில் அனைத்து தகவல்​களை​யும் பராமரிக்க வேண்​டும்.

மரங்​கள் அகற்​றப்​பட்​டு, அதில் பிற மரங்​கள் நடப்​பட்​டது தொடர்​பான புகைப்​படங்​களை​யும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மரக்​கன்​றுகளை மீண்​டும் நடு​வதற்கு மாநில அளவில் வனப்பாது​காவலர், வேளாண்மை இயக்குநரைக் கொண்ட குழு அமைக்​கப்​படும்.

அவ்வாறு மீண்டும் நடப்படும் மரங்கள் பறவைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் விறகு போன்ற பயன்பாட்டுக்கும் உதவும் வகையி​லான மரங்​களாக இருப்​பதை கருத்​தில் கொள்ள வேண்​டும்.

சீமைக் கருவே மரங்​களை ஏலம் விடும் பணியை 4 மாதங்​களில் முடிக்க வேண்​டும். மேலும் அகற்​றும் பணியை 6 மாதங்​களில் முடிக்க வேண்​டும். கரு​வேல மரங்​கள் இல்​லாத பகு​தி​களாக அறிவிக்​கும் வகை​யில் இந்த செயல்​பாடு​களை மேற்​கொள்ள வேண்​டும்.

இதே​போல் தனி​யார் நில உரிமை​யாளர்​கள் தங்​கள் நிலங்​களில் வளர்ந்​துள்ள சீமைக் கரு​வேல மரங்​களை 30 நாட்​களில் அகற்ற வேண்​டும். தவறி​னால் அதி​காரி​கள் அகற்றி அதற்குரிய கட்​ட​ணம் வசூலிக்க வேண்​டும்.

அரசுத் துறை​களுக்கு சொந்​த​மான இடங்​களில் வளர்ந்​துள்ள கரு​வேல மரங்​களை அகற்ற ஒரே நேரத்​தில் நடவடிக்கை எடுக்கவேண்​டும். இப்​பணி​களை ஒருங்​கிணைக்​க​வும், விரைவுபடுத்​த​வும், கண்​காணிக்​க​வும் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் உள்​ளடங்​கிய பணிக்​குழுக்​கள் அமைக்க வேண்​டும்.

அகற்​றும் பணி​களை மேற்​பார்​வை​யிட சென்னை உயர் நீதி​மன்ற பகு​திக்கு உட்​பட்ட வடக்கு மாவட்​டங்​களுக்கு ஓய்​வு​பெற்ற நீதிபதி வி.​பார​திதாசனும், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வுக்கு உட்​பட்ட தென்​மாவட்​டங்​களுக்கு ஓய்​வு​பெற்ற நீதிபதி ஏ.செல்​வ​மும் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

அடுத்த பரு​வமழை தொடங்​கு​வதற்கு முன்பே அகற்​றும் பணியை முடிக்க வேண்​டும். அப்​போது​தான் பருவமழைக்கு உள்​ளூர் தாவர இனங்​களை நட்டு வளர்க்க முடி​யும். இவ்​வாறு உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப்​.17-க்கு தள்ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT