தமிழகம்

முன்னாள் டிஜிபி மனைவியின் நிலத்தை அபகரிக்க முயற்சி: சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக டிஜி​பியாகப் பதவி வகித்த ரவீந்​திரன் கடந்த 2021-ம் ஆண்டு இறந்​தார். அவரது மனைவி ராணி புஷ்பலதா ரவீந்திரன் கடந்​தாண்டு உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் ராணி புஷ்பலதா தனது சொத்​துக்​களைத் திலிப்குமார் என்​பவருக்கு உயில் எழுதி வைத்​துள்​ள​தாகவும், அந்த உயிலை செயல்​படுத்த வழக்​கறிஞராக தன்னை நியமித்துள்​ள​தாகவும் கூறி பரமசிவம் என்​பவர், அந்த உயிலுக்கு சான்​றளிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த தனி நீதிபதி, உயி​லில் பல்வேறு சந்​தேகங்​கள் உள்​ள​தாக கூறி மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை எதிர்த்து பரமசிவம் உயர் நீதிமன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தார். இந்த மேல்​முறையீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் என். சதீஷ்குமார், ஜி.கே.முத்துக்குமார் ஆகியோர் அடங்​கிய அமர்​வி்ல் நடந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், சொத்​துக்​கான சட்​டப்​பூர்வ வாரிசு யாரும் தற்​போது ஊரில் இல்​லாத நேரத்​தில் முன்​னாள் டிஜிபி​யின் மனைவிக்​குச் சொந்​த​மான சொத்​துக்​களை அபகரிக்க முயற்சி நடந்​திருப்​ப​தற்கு முகாந்​திரம் உள்​ளது. எனவே, இது​தொடர்​பாக சிபி​சிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடத்த வேண்​டும். அந்த அறிக்​கையைத் தமிழக டிஜிபி டிச.14 அன்று தாக்கல் செய்ய வேண்​டும் என்று உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT