தமிழகம்

21 அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்​ட​தில் என்ன தவறு? - உயர் நீதி​மன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: அதி​முக கொறடா உத்​தரவை மீறியதற்​காக கட்​சித் தலை​மை​யிடம் மன்​னிப்பு கோரியபிறகு 21 அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்​கையை பேர​வைத் தலை​வர் கைவிட்​ட​தில் என்ன தவறு உள்​ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதி​மன்றம் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13 அன்று தவெக அரசுக்கு ஆதர​வாக நம்​பிக்கை தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டது. அப்​போது அதி​முகவைச் சேர்ந்த 25 எம்​எல்​ஏ-க்​கள் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அதி​முக கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​தால் அந்த 25 பேரை​யும் தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தார்.

இந்​நிலை​யில் மது​ராந்​தகம் மரகதம் குமர​வேல், பெருந்​துறை ஜெயக்​கு​மார், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்த நிலை​யில், எஞ்​சிய 21 அதி​முக எம்​எல்​ஏ-க்​களும் மன்​னிப்பு கோரி கடிதம் அளித்​துள்​ள​தால் அவர்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்கை கோரும் மனுவை திரும்​பப்​பெற்​றுக்​கொள்​வ​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேர​வைத் தலை​வருக்கு மீண்​டும் கடிதம் கொடுத்​தார்.

அதையேற்று பேர​வைத் தலை​வர் 21 அதி​முக எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிடு​வ​தாக உத்​தரவு பிறப்​பித்​தார்.

இந்​நிலை​யில், பேர​வைத் தலை​வரின் இந்த கைவிடு​தல் உத்​தரவு சட்ட விரோதமானது என்றும், அதை ரத்து செய்​யக்​கோரியும் வழக்​கறிஞர் பி.​வி.செல்​வக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சக்​திவேல், `கட்சி மாறி வாக்​களித்​தவர்​களுக்கு மன்​னிப்பு வழங்​கும் அதி​காரம் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் இல்​லை. கொறடா உத்​தரவை மீறி கட்​சிக்கு எதி​ராக செயல்​படும் எம்​எல்​ஏ-க்​கள் தாமாகவே தங்​களது பதவியை துறந்து விடு​கின்​றனர். இந்​நிலை​யில் அவர்​கள் மன்​னிப்பு கோரி​விட்​டார்​கள்.

நாங்​களும் அதை ஏற்​றுக்​கொள்​கிறோம் என்​கிற ரீதி​யில் கொறடா உத்​தரவை மீறி செயல்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்​டதைத்​தான் அரசி​யல் சாசன கேலிக்​கூத்து என்​கிறோம்' என்​றார்.

அப்​போது பேர​வைத் தலை​வர் தரப்​பில் ஆஜரான அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், `இது ஒரு கட்​சி​யின் எம்​எல்​ஏ-க்​களுக்​கும், அந்த கட்​சிக்​கும் இடையி​லான பிரச்​னை. கொறடா உத்​தரவை மீறி செயல்​பட்​ட​வர்​களை பொதுச்​செய​லா​ளர் மன்​னித்து விட்​ட​தால் அவர்​கள் மீண்​டும் அந்த கட்​சி​யி்ன் உறுப்​பினர்​களாகவே செயல்​படு​கின்​றனர். இதுதொடர்​பாக மூன்​றாவது நபர் யாரும் பொதுநல வழக்கு தொடர முடி​யாது' என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ``கொறடா உத்​தரவை மீறி வாக்​களித்​தவர்​களை அக்​கட்​சி​யின் தலைமை மன்​னித்து விட்​ட​தால், அவர்​கள் அந்த கட்​சி​யின் உறுப்​பினர்​களாகவே நீடிக்​கின்​றனர். அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் 21 பேரும் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​ய​வில்​லை. சட்​டப்​படி 15 நாட்​களில் அவர்​கள் மன்​னிப்பு கோரி​யுள்​ள​தால் அவர்​கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை திரும்​பப்​பெறப்​பட்​டுள்​ளது. அதை பேர​வைத் தலை​வரும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார். அதில் என்ன தவறு உள்​ளது?

இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட கட்சி எந்த வழக்​கும் தொடர​வில்​லை. கட்​சிக்கு சம்​பந்​தமி்ல்​லாத மூன்​றாவது நபர் இந்த வழக்​கைத்​தொடர எந்த மு​காந்​திர​மும் இல்​லை'' என தெரி​வித்​து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT