3 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடலூர் உள்​ளிட்ட 3 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகு​தி​களில் கீழ்​மட்ட வளிமண்​டலத்தில் ஒரு பலவீன​மான காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (ஆக.19) செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

திரு​வள்​ளூர், சென்​னை, திரு​வண்​ணா​மலை, பெரம்​பலூர், அரியலூர், மயி​லாடு​துறை, புதுக்​கோட்​டை, சிவகங்​கை, மதுரை, திண்​டுக்​கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்​கல் மற்​றும் திருச்சி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
லண்​டனில் இருந்து மீட்​கப்​பட்ட திரு​மங்கை ஆழ்​வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in