தமிழகம்

சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் சாலைகள், தெருக்​கள், நீர்​நிலைகளின் சாதி​யப் பெயர்​களை நீக்​கக் கோரிய அரசாணையில் குறை​பாடு இருப்​ப​தாக தெரி​வித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, அது எப்​போது சரி செய்​யப்​படும் என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் குடி​யிருப்​பு​கள், சாலைகள், தெருக்​கள், நீர் நிலைகளுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கி, தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

          

அதன்​படி, கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், சாலைகள், தெருக்​கள், நீர் நிலைகளின் சாதிப் பெயர்​களை நீக்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. ஆதி திரா​விடர்காலனி, ஹரிஜன் குடி​யிருப்​பு, வண்​ணான்​குளம் போன்ற சாதிப்பெயர்​களை நீக்​குதல், புதிய பெயரிடும் பணி​களை நவ. 19-ம் தேதிக்​குள் முடிக்க உத்​தர​விடப்​பட்​டது.

இந்த நடை​முறை​யில் பல்​வேறு பிரச்​சினை​கள் உள்​ளன. எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, அரசாணை​யைச் செயல்​படுத்த தடை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த மனு மீண்​டும் நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், அரசாணை அடிப்​படை​யில் 45 நாட்​களில் தமிழகம் முழு​வதும் உள்ள சாலைகள், தெருக்​கள், ஊரின் பெயர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களின் பெயரை மாற்​று​வது நடை​முறை​யில் சாத்​தி​ய​மானது அல்ல.

எனவே, தெளிவு இல்​லாமலும், போதிய அவகாசம் வழங்​கப்​ப​டா​மலும் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், “அந்த அரசாணை​யில், குறிப்​பிட்ட காலத்​துக்​குள் ஒவ்​வொரு பணி​யை​யும் முடிக்க வேண்​டும் என்​ப​தற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள்​தான் உள்​ளன. எனவே, தடையை விலக்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “நீ​தி​மன்​றம் அரசின் கொள்கை முடி​வில் தலை​யிட முடி​யாது. ஆனால், இந்த அரசாணை​யில் குறை​பாடு​கள் உள்​ளன. நடை​முறைப்​படுத்​து​வ​தி​லும் சில கேள்வி​கள் எழுகின்​றன. அவற்றை எவ்​வாறு சரி செய்​வீர்​கள் என்று நீதி​மன்​றம் அறிய விரும்​பு​கிறது.

பிப். 23-க்கு தள்ளிவைப்பு: மேலும், சாதிப் பெயர்​களை நீக்​கு​வது குறித்து 1978-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை அடிப்​படை​யில் என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்​தும் அரசுத் தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை பிப். 23-ம் தேதிக்கு தள்​ளி வைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT