கோப்புப் படம்

 
தமிழகம்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூல் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்​கள் அறிவிக்கப்பட்டுள்​ளது.

இது குறித்து போக்​கு​வரத்து ஆணை​யர் கிரண் குராலா வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் – 2026, நாளை 23-ம் தேதி அன்று வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வதை முன்​னிட்​டு, ஏப்​.21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மக்​கள் வெளியூர் பயணம் மேற்​கொள்​வதைப் பயன்​படுத்தி தனி​யார் ஆம்னி பேருந்​துகள் அதி​கப்​படி​யான கட்​ட​ணம் வசூல் செய்​தால், அதனைத் தடுக்க தமிழகம் முழு​வதும் வட்​டாரப்​போக்​கு​வரத்து அலு​வலர்​கள், மோட்​டார் வாகன ஆய்​வாளர்​கள் மற்​றும் போக்​கு​வரத்து சோதனைச்​சாவடி ஆய்​வாளர்​கள் அடங்​கிய சிறப்​புக்​குழு அமைக்​கப்​பட்​டு, அவ்​வாறு இயங்​கும் ஆம்னி பேருந்​துகளை தீவிர​மாக சோதனை செய்து அனு​மதி ரத்து போன்று நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

மேலும் ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிப்​ப​தாக தெரிய​வந்​தால் உரிய நடவடிக்கை மேற்​கொள்​ளும் பொருட்டு கைபேசி எண்​கள் மூலம், வாட்ஸ் ஆப், குறுஞ்​செய்தி குரல் பதிவு மூல​மாக புகார் தெரிவிக்க கேட்​டுக் ​கொள்​ளப்​படு​கிறது.

போக்​கு​வரத்து மற்​றும் சாலை பாது​காப்பு ஆணை​யரகம், சென்னை 1800 425 6151, இணைப்​போக்​கு​வரத்து ஆணை​யரகங்​கள்- சென்னை (வடக்​கு) 99442 53404, சென்னை (தெற்​கு) 97905 50052, மதுரை 90953 66394, கோவை 91235 93971, துணைப் போக்​கு​வரத்து ஆணை​யரகங்​கள் - விழுப்​புரம் 96773 98825, வேலூர் 98400 23011, சேலம் 78456 36423, ஈரோடு 80569 40040, திருச்சி 90660 32343, விருதுநகர் 90257 23800, திருநெல்​வேலி 96981 18011, தஞ்​சாவூர் 95850 20865 ஆகிய எண்​களில் புகார் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT