தமிழகம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகத்தில் 12-ம் தேதி முதல் கனமழை தீவிரமடையும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய கேரள கடல் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள லட்​சத்​தீவு பகு​தி​களின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்​தில் ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

மேலும், மன்​னார் வளை​குடா மற்​றும் அதனை ஒட்​டிய இலங்கை பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கி.மீ உயரம் வரை நில​வு​கிறது. இதன் காரண​மாக தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் 11-ம் தேதி ஒரு குறைந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக் கூடும்.

மரத்​வாடா முதல், கடலோர கர்​நாட​கா, வட உள் கர்​நாடகா மற்​றும் மத்​திய மகா​ராஷ்டிரா வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (மே 10) தென் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 11, 12-ம் தேதி​களில் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 13-ம் தேதி வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 14, 15-ம்

தேதி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்யக்​கூடும்.

ராம​நாத​புரம், கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக் கூடும். நாகப்​பட்​டினம், தஞ்​சாவூர், திரு​வாரூர், ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்​டை,

மயி​லாடு​துறை, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் 12-ம் தேதி​யும், சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, காஞ்​சிபுரம், வேலூர், திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, கடலூர், மயி​லாடு​துறை, விழுப்​புரம், நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் 13-ம் தேதி​யும் இடி மின்​னலுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று முதல் 13-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை குறையக்​கூடும்.

நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 93 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 75 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​தில் 17 செ.மீ, நாலு​முக்​கில் 16 செ.மீ, காக்​காச்​சி​யில் 14 செ.மீ, மாஞ்​சோலை​யில் 11 செ.மீ, தென்​காசி மாவட்​டம் ஆய்க்​குடி​யில் 9 செ.மீ, தேனி மாவட்​டம் போடி​நாயக்​க​னூரில் 9 செ.மீ, தென்​காசி மாவட்​டம் கருப்​பாநதி அணை, தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரப்​பட்​டினம், தென்​காசி மாவட்​டம் செங்​கோட்​டை, தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தில்​ தலா 7 செ.மீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT