தமிழகம்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும்

செய்திப்பிரிவு

சென்னை: வங்​கக் கடலில் நாளை (அக்.23) உரு​வாகும் காற்றழுத்த தாழ்​வுப் பகுதி புய​லாக வலுப்​பெறுகிறது. இதையொட்டி தமிழகத்​தில் இன்று டெல்டா உள்​ளிட்ட 18 மாவட்டங்​களில் கனமழை பெய்​யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்.துரை நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தென்​கிழக்கு வங்​கக் கடல் மற்​றும் மத்​திய கிழக்கு வங்​கக் கடல் பகுதி​யில், நாளை (23-ம் தேதி) குறைந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி புய​லாக வலுப்​பெற வாய்ப்பு உள்​ளது. இது வலு​வடைந்து மேற்கு, தென் மேற்கு திசையில் நகரும். இப்​போதுள்ள தரவு​களின்​படி, தமிழகத்​துக்கு இந்த புய​லால் பாதிப்பு இல்லை.

தமிழக கடலோரப் பகுதி​களுக்கு அப்​பால் உள்ள தென்​மேற்கு வங்​கக் கடல் பகுதி​யில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி​யுள்​ளது. இது புய​லாக வலுப்​பெற வாய்ப்​பில்லை. இதன் காரண​மாக தமிழகத்​தில் தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, திண்​டுக்​கல், மதுரை, கோவை, நீல​கிரி, சிவகங்கை, புதுக்​கோட்டை, தஞ்​சாவூர், திருவாரூர், நாகப்​பட்​டினம் மற்​றும் மயி​லாடு​துறை ஆகிய மாவட்டங்​களில் ஓரிரு இடங்​களில் கன மழை முதல் மிக கனமழை பெய்​யக் கூடும்.

திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்​பலூர், கடலூர், நாமக்​கல், விழுப்​புரம், திருப்​பூர் மற்​றும் கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழையும். மேலும் மாநிலத்​தின் பெரும்​பாலான இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக் கூடும்.

நாளை (23-ம் தேதி) கன்​னியாகுமரி, நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்​யக் கூடும். ஈரோடு, சேலம், நாமக்​கல், கரூர், திருச்சி, தேனி, தென்​காசி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், புதுக்​கோட்டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, சிவகங்கை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, அரியலூர், கடலூர், விழுப்​புரம், திருப்​பூர் மற்​றும் பெரம்​பலூர், மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன மழையும், மேலும் மாநிலத்​தின் பெரும்​பாலான இடங்​களில் மித​மான மழையும் பெய்​யக் கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் பொது​வாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒரு சில பகுதி​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்​படி, சென்னை எம்​ஜிஆர் நகரில் 15 செ.மீ. வடபழனி​யில் 14 செ.மீ. சைதாப்​பேட்டை, சென்னை விமான நிலை​யம், ஆலந்​தூர், காஞ்​சிபுரம் மாவட்​டம் கொளப்​பாக்​கத்​தில் தலா 13 செ.மீ. சென்னை மீனம்​பாக்​கம், டிஜிபி அலு​வல​கம், மடிப்​பாக்​கம், வளசர​வாக்​கம், மதுர​வாயல், கன்​னியாகுமரி மாவட்​டம் குளச்​சல் ஆகிய இடங்​களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.

எல் நினோ தாக்​கத்​தால் வடகிழக்கு பரு​வ​மழை குறைய வாய்ப்​பில்லை. அதி​க​மாகவே பெய்​யும். அக்​டோபர் முதல் டிசம்​பர் வரை வடகிழக்கு பரு​வ​மழை காலத்​தில் வழக்​க​மாக 44 செ.மீ. மழை கிடைக்​கும். இந்த ஆண்டு அக்.21-ம் தேதி (நேற்று) வரை 11 செ.மீ. மழை பெய்​துள்​ளது. இந்​தக் கால கட்​டத்​தில் வழக்​க​மாக 10 செ.மீ. மழை கிடைக்​கும். தற்​போது ஒரு சதவீதம் அதி​க​மாக 11 சதவீத மழை பெய்​துள்​ளது. இவ்​வாறு வி.ஆர். துரை கூறினார்.

‘டெல்​டாவில் பயிர் சேதம் இல்லை’

தமிழக வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் பி.சந்​திரமோகன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாகத் தாழ்​வான பகுதி​களில் மழைநீர் தேங்​கியது. பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் அகற்​றப்​பட்டு விட்​டது. கனமழையால் விழும் மரங்​கள் உடனுக்​குடன் அப்​புறப்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. கனமழையால் வீடுகள் சேதம் அடைந்​த​தாக இது​வரை தகவல் வர​வில்லை. கடந்த 48 மணி நேரத்​தில் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​களு​டனும் பேசி​யுள்​ளோம். தற்​போதும் பேசி வரு​கிறோம்.

அனைவரும் மழையை சமாளிக்க முன்​னெச்​சரிக்​கையுடன் தயார் நிலை​யில் உள்​ளனர். கன்​னியாகுமரி, தென்​காசி, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி உள்​ளிட்ட தென் மாவட்​டங்​களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்​ப​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. அங்​கும் மாவட்ட ஆட்சி​யர்​கள் தயார் நிலை​யில் உள்​ளனர். மீட்​புக் குழு​வினரும் தயார் நிலை​யில் உள்​ளனர். டெல்டா மாவட்​டங்​களில் இது​வரை பயிர் சேதம் ஏதும் ஏற்​பட​வில்லை. இவ்​வாறு அவர் கூறினார்.

மழை மானியில் முரண்​பட்ட தகவல்

சென்னை மாநகரில் கடந்த அக்.17-ம் தேதி இரவு அதி கனமழை பெய்தது. அதி​கபட்​ச​மாகப் பாரிமுனை​யில் 36 செ.மீ. மழை பதி வானது. மாநகரின் பல சாலைகள் வெள்​ளக்​காடாயின. அன்று மாலை 6.30 முதல் 7.30 மணிக்​குள்​ளாக சுமார் 10 செ.மீ. மழை பதிவானதால், மேகவெடிப்​பாக இருக்​கும் என்று செய்​தி​கள் பர​வின. ஆனால், மேகவெடிப்​பால் அதிக மழை பெய்​ய​வில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்​கம் அளித்​தது.

அன்​றைய தினம், மாநக​ராட்சி சார்​பில் பாரிமுனை​யில் நிறு​வப்​பட்​டுள்ள தானியங்கி மழை மானி​யில் 36 செ.மீ. மழை பதிவானது. அதன் அரு​கில் சென்னை சென்ட்​ரலில் பகுதி​யில் உள்ள மாநக​ராட்சி மழை மானி​யில் 27 செ.மீ. மழை பதிவானது. சென்ட்​ரலுக்கு மிக அரு​கில் உள்ள புதுப்​பேட்​டை​யில் உள்ள மாநக​ராட்சி மழை மானி​யில் 14 செ.மீ. மழை மட்​டுமே பதிவானது.

பாரிமுனையை விட, சென்ட்​ரலில் 9 செ.மீ. சென்ட்​ரலுடன் புதுப்​பேட்​டையை ஒப்​பிடும்​போது 13 செ.மீ. குறைவாக மழை பெய்​துள்​ளது. இத​னால் மாநக​ராட்சி மழை மானிகளின் தரவு​கள் மீதான நம்​பகத்​தன்மை கேள்​விக்​குறி​யாகி உள்​ளது. மேலும், மீனம்​பாக்​கத்​தில் மாநக​ராட்சி மழை மானி​யில் 28 செ.மீ. வானிலை ஆய்வு மைய மழை மானி​யில் 15 செ.மீ. பதிவாகி உள்​ளது. இதில் மாநக​ராட்சி மற்​றும் வானிலை மைய மழை மானிகளுக்கு இடையே முரணான தகவல் பதிவாகி​யுள்​ளது.

பாரிமுனை​யில் 18-ம் தேதி காலை வரை 36 செ.மீ. மழை பெய்​ததால், அடுத்த நாளும் அதி​க​னமழை வாய்ப்பு என அறி​விக்​கப்​பட்​ட​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது​குறித்து வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்.துரையிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​டபோது, “இதுபோன்று வித்​தி​யாசம் வர வாய்ப்​பில்லை. இது​தொடர்​பாக அனைத்து மழை மானிகளை​யும் ஆய்வு செய்​யுமாறு, வானிலை மைய அதி​காரி​கள் மற்​றும் சென்னை மாநக​ராட்சி அதி​காரி​களுக்கு அவரவர் துறை சார்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT