கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் 3 மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் விருதுநகர் உள்​ளிட்ட 3 மாவட்ட மலைப் பகு​தி​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: ராயலசீமா மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​கள் முதல் மன்​னார் வளை​குடா வரை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில் தமிழகம் வழி​யாக ஒரு காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்று (6-ம் தேதி) தென் தமிழகம் மற்​றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் 7-ம் தேதி தமிழக கடலோர மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், 8-ம் தேதி தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும்.

          

9, 10 தேதி​களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​கள், தமிழக கடலோர மாவட்​டங்​களி​லும், 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக் கூடும். இதர பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வக் கூடும்.

வட தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் வெப்பநிலை வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவு வரை அதி​க​மாக இருக்​கக் கூடும். தமிழகத்​தில் இன்று விருதுநகர், தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 100 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 82 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக் கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின் படி அதி​கபட்​ச​மாக, திருநெல்​வேலி மாவட்​டம் நாலு​முக்​கு, ஊத்​தில் 7 செமீ, வேலூர் மாவட்​டம் பொன்னை அணை, திருநெல்​வேலி மாவட்​டம் காக்​காச்​சி, நீல​கிரி மாவட்​டம், பார்​வூட், கடலூர் மாவட்​டம் தொழுதூரில் தலா 5 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT