தமிழகம்

தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை: சென்னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீசும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் இன்று முதல் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​ய​வும், சென்​னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீச​வும் வாய்ப்​பு உள்ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய வங்​கக்​கடல் பகுதிகளி​லிருந்து தமிழகம் வரை தென்​மேற்கு வங்​கக்​கடல் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (மே 22) ஓரிரு இடங்​களி​லும், 23, 24 தேதி​களில் ஒருசில இடங்​களி​லும், 25 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று சேலம், தரு​மபுரி மற்​றும் கிருஷ்ணகிரி மாவட்டங்​களி​லும். 23-ம் தேதி திரு​வண்​ணா​மலை, திருச்​சி, சேலம், நாமக்​கல், வேலூர், திருப்​பத்​தூர் மற்​றும் தரு​மபுரி மாவட்டங்​களி​லும், 24-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்பகுதி​கள், நீல​கிரி, வேலூர், ராணிப்​பேட்டை மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களி​லும். 25-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, ஈரோடு மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். 26-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்​றும் நாமக்​கல் மாவட்டங்​களி​லும், 27-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்பகுதி​கள், நீல​கிரி, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

உள் தமிழக பகு​தி​களில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​க​மான அளவை ஒட்​டியே இருக்​கும். கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் வெப்ப அலை வீசக்​கூடும். மாலை அல்​லது இரவு நேரங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 107 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 86 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

18 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி திருத்தணியில் 107 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

ஈரோட்டில் 105 டிகிரி, திருச்சி, கரூர் பரமத்தி, மதுரை மாநகரம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 104 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, தஞ்சாவூர், தருமபுரியில் தலா 102 டிகிரி, பாளையங்கோட்டை, நாமக்கல்லில் தலா 101 டிகிரி, திருப்பத்தூர், சேலம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, கடலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இவ்​வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT