தமிழகம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

செய்திப்பிரிவு

சென்னை: கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள் மற்​றும் நீல​கிரி மாவட்​டத்​தில் இன்று (24-ம் தேதி) ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், செங்​கல்​பட்​டு, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர், சேலம், மதுரை மற்​றும் திருப்​பத்​தூர் மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும். 25-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள் மற்​றும் நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழையும் பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT