கோப்புப்படம்

 
தமிழகம்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

செய்திப்பிரிவு

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று கரையைக் கடக்​கும் நிலை​யில், நாகை உள்​ளிட்ட 14 மாவட்​டங்களில் இன்று (ஜன. 10) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் பூமத்​திய ரேகையை ஒட்​டிய இந்​தி​ய பெருங்​கடல் பகு​தி​களில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​திகளில், இலங்கை மட்​டகளப்​புக்கு தென்​கிழக்கே சுமார் 170 கி.மீ. தொலை​விலும், சென்​னைக்கு தென்​கிழக்கே 710 கி.மீ. தொலை​விலும் நிலை கொண்​டுள்​ளது.

இது, மேலும் வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, வடக்கு இலங்கை கடலோரப் பகு​தி​களில், திரி​கோணமலை, யாழ்ப்​பாணம் இடையே இன்று பிற்​பகல் அல்​லது மாலை கரையை கடக்​கக்​கூடும்.

இதன் காரண​மாக இன்று (ஜன.10) கடலோர பகு​தி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் உள் தமிழகத்​தில் சில இடங்​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

நாளை வட தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் சில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், வரும் 12-ம் தேதி தமிழகத்​தில் சில இடங்​களி​லும், 13 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

திரு​வாரூர், நாகை, மயி​லாடு​துறை, கடலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று கன முதல் மிக கனமழை​யும், சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, அரியலூர், தஞ்​சாவூர், புதுக்​கோட்டை, ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்களி​லும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

நாளை சென்​னை, செங்​கை, திரு​வள்​ளூர், காஞ்​சி ராணிப்​பேட்டை, வேலூர், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மற்​றும் புதுச்​சேரியில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

SCROLL FOR NEXT